இது தாங்க அரசியல்: பள்ளிகள் சார்பில் ஒரு கட்சி !
கோவை:
தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கத்தினர் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆங்கிலப் பள்ளிகளின் உரிமையாளர்கள் இணைந்து, தமிழ் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்என்ற அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளின்பொதுச் செயலராகத் தேர்வு பெற்ற பி.டி குமார் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக அரசியலில் சாதி வாரியான கட்சிகள் அரசியல் நடத்த முடிவு செய்து தனிக் கட்சிகள் தொடங்கிவருகின்றன. நாட்டில் மதவாதம், பிரிவினை வாதம், தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.
அரசியலில் படித்த சான்றோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் குற்றவாளிகளின்ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தற்போதுள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையைகிழிக்கவும், இவர்களைப் பற்றி ஆதாரத்துடன் மக்களிடம் எடுத்துச் சொல்லவும் தனிக் கட்சி தொடங்க உள்ளோம்.
தமிழ்நாடு தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளின் சங்கம் தொடங்கும் இக்கட்சியினால் கல்விப் பணி எவ்விதத்திலும்பாதிக்கப்படாது.
இந்தப் புதிய கட்சியின் பெயர் டெல்லியில் செப்டம்பர் 25ம் தேதி பதிவு செய்யப்படும்.கொடி, சின்னம் மற்றும்கொள்கைகள் அனைத்தும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
குமரி முதல் சென்னை வரை அனைத்து மக்களிடம் எங்களது கொள்கைகளை விளக்கி கூறி ஆதரவு திரட்டஉள்ளோம்.
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் வரும் தேர்தலில் கூட்டணி வைப்போம்.வெற்றி பெற்றால், ஏழை எளியமக்களுக்குப் பணியாற்றுவோம். வேலையில்லாப் பட்டதாரிகள் பயன் பெறும் வகையில் தொழிற்சாலைகளைஉருவாக்குவோம். சக விரோதிகளை இனம் கண்டு நேரடித் தண்டனை வழங்குவோம்.
தற்போது வளர்ச்சி பெற்றுள்ள தொழில்நுட்பங்களுக்குத் தகுந்தவாறு விஞ்ஞானக் கல்வியைப் பள்ளிகளில்போதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
புதிய கட்சியின் முதல் மாநாடு சென்னை மெரீனா கடற்கரையில் ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்துள்ளோம்.இவ்வாறு பி.டி குமார் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications