தேர்தல் ஜுரத்தில் தி.மு.க.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்களே நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க. சுறுசுறுப்படையத்தொடங்கிவிட்டது.
அரசு இயந்திரங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாநில அமைச்சர்கள் சூறாவளிச் சுற்றுப் பயணத்தின் முதல் அடிஎடுத்து வைத்து விட்டனர். ஆளும் தி.மு.க. அடுத்து வரும் தேர்தலிலும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளதீவிரமாக இறங்கி விட்டது.
எதிர்க் கட்சிகள், ஆளும் கட்சியைக் குறை கூறி, மக்களின் மனதை எளிதாக மாற்றி ஓட்டுக்களைப் பெற முடியும்.ஆளும் கட்சி என்னதான் செய்திருந்தாலும், மக்கள் மனதில் எளிதாக மாற்றம் வந்து விடாது. இந் நிலையில் ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதே "பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. இதன் விளைவு தான்அமைச்சர்களின் சூறாவளிச் சுற்றுப் பயணம்.
கடந்த சில நாட்களுக்கு முன், மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் அதிரடியாக இரண்டு நாள் சுற்றுப் பயணம்செய்தார். இரண்டு நாட்களில் 21 அரசு விழாக்களில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இவரது பேச்சு முழுவதும்அரசின் சாதனைகளைச் சொல்வதாகவே இருந்தது.
எத்தனை துறைகளில், என்ன சாதனை செய்திருக்கிறது என்பதை மறக்காமல் ஒப்பித்துச் சென்றார் சென்னைமேயரும் முதல்வர் கரிணாநிதியின் மகனுமான ஸ்டாலின். தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் மு.கஸ்டாலின் பல முறை சுற்றுப் பயணம் செய்துள்ளார்.
ஸ்டாலின் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் என்.கே.கே. பெரியசாமி, துறைமுருகன், அந்தியூர்செல்வராஜ் என கடந்த சில நாட்களில் அமைச்சர்களின் வருகை தொடர்ந்து இருந்தது. ஸடாலின் வருகைக்கு முன்தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், சமூகநலத் துறை அமைச்சர் சற்குணபாண்டியன் ஆகியோரும்வருகை தந்தனர்.
சென்னையில் சமீபத்தில் நடந்த மாவட்ட செய்தித்துறை அதிகாரிகளின் கூட்டத்தில், செய்தித்துறையின் மீதுஅமைச்சர்கள் அடுக்கடுக்காக புகார்களை அடுக்கியுள்ளனர். இக் கூட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலர்கள்எல்லோரும் ஆடிப் போய்விட்டனர்.
அரசின் சாதனைகளை பத்திரிக்கைகளில் போதுமான அளவிற்கு விளம்பரப்படுத்தவில்லை என்ற புகார்எதிரொலித்தது.
இன்னும் அமல்படுத்தப்படுத்தாத அனைத்துத் திட்டங்களையும் விரைவில் அமல்படுத்தவும், தீர்க்க முடியாத பலசிக்கல்களைத் தீர்க்கவும், அரசு இப்போது முனைப்புக் காட்டி வருகிறது.
இப்போது எந்தத் திட்டத்திற்கும் அரசிடம் "நிதி இல்லை என்ற பேச்சே இல்லை.
மக்களிடம் மனுப் பெறுவதிலும், அதனைத் தீர்ப்பதிலும் கூட அதிகாரிகள் முனைப்புக் காட்டத் தொடங்கிஉள்ளனர்.
தூசி படிந்து போன பலத் திட்டங்கள் தற்போது புதுப் பொழிவு பெறத் தொடங்கியுள்ளன. மக்கள் நலத் திட்டங்கள்விரைவாக அமல்படுத்தப்படுகின்றன. வரும் தேர்தலை மனதில் கொண்டு, ஏழை மக்களைக் கவர, கடந்த 1950ம்ஆண்டு தொடங்கப்பட்ட பூமி தானத் திட்டம், இப்போது அமல்படுத்தப்படுகிறது.
பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, அரசுக்குப்பயன்படாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கி விட்டது.
மாவட்ட நிர்வாகங்கள் புதிய சுறுசுறுப்பைப் பெற்றுள்ளன. இனி அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள்அதிகமாகவே இருக்கும். சாதனை சத்தங்களும் அதிகம் கேட்கும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications