கர்நாடக முதல்வரின் கண்தானம்
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும், 3 அமைச்சர்களும் வியாழக்கிழமை தங்கள் கண்களை தானம் செய்வதாக அறிவித்தனர்.
பெங்களூரில் வியாழக்கிழமை கண்தான விழா நடந்தது. இதில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சந்திரசேகர், மருத்துவத்துறை அமைச்சர் நபீசா பசல்,சுகாதாரத்துறை அமைச்சர் மல்கா ரெட்டி ஆகியோரும் முதல்வருடன் சேர்ந்து தங்கள் கண்களைத் தானம் செய்வதாக கூறினர்.
பின்னர் நடந்த கண்தானம் குறித்த கருத்தரங்கில் முதல்வர் கிருஷ்ணா பேசியபோது, நான் எனது கண்களைத் தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். இதுகுறித்துமிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஹெல்ப்லைன் 1919 என்ற அமைப்பு மூலம் எனது கண்களைத் தானம் செய்கிறேன்.
இந்த வருடத்திற்குள் பார்வையின்மையை 1.4 சதவீதத்திலிருந்து 0.3 சதவீதமாகக் குறைக்க வேண்டும். பார்வையின்மை குறித்து கிராம மக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமங்களில் பிரச்சாரம் நடத்த வேண்டும் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications