இலங்கை:வரதராஜ பெருமாளுக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்ததற்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் முன்னாள் வட கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜ பெருமாள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தசியக் கட்சி கண்டம் தெரிவித்துள்ளது.

அதிபர் சந்திரிகாவின் தம்பியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான அனுரா பண்டாரநாயகே இதுகுறித்துக் கூறுகையில், ஒரு காலத்தில்தமிழர்களுக்காக நாட்டைத் துண்டாட நினைத்த ஒருவருக்கு அதிபர் சந்திரிகா, தேர்தலில் நிற்க டிக்கெட் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் வரதராஜ பெருமாள் பெயர் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்றார் அவர்.

1990-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு வட கிழக்கு மாகாண முதல்வராக இருந்தவர் வரதராஜ பெருமாள்.பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை மூண்டதால், இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவுக்குத் தப்பி வந்தார். ஒரிசாமாநிலத்தில் இருந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்தான் இலங்கை திரும்பினார்.

இலங்கை திரும்பிய அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். முதலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில்அவரது பெயர் ஆளுங்கட்சியின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதற்குத்தான் இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+