தமிழரசனுக்கு வீரப்பனின் வீரவணக்கம்!
சென்னை:
தமிழ்த் தீவிரவாதிகளின் தலைவன் தமிழரசனின் நினைவு தினத்தை வீரப்பனும், அவனது கூட்டாளிகளும்,அவனுடன் சேர்த்திருக்கும் தமிழ் விடுதலைப்படையினரும் வீர வணக்கம் செலுத்தி அனுஷ்டித்தனர்.
தமிழ் விடுதலைப் படையின் தலைவனான தமிழரசன் சில ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 1-ம் தேதிகொல்லப்பட்டான். அவனது நினைவு தினம் சத்தியமங்கலம் காட்டிற்குள் அவனது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தி அனுசரிக்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தற்போது தமிழர் விடுதலைப் படையினர் சேர்ந்துள்ளனர். வீரப்பனும்தற்போது தமிழர்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்டிருக்கிறான்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பன், அவரை விடுவிக்க விடுத்துள்ளகோரிக்கைகளில் தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதியன்று காட்டுக்குள் அமைக்கப்பட்ட கொடிமரம் ஒன்றில் தமிழ்விடுதலை இயக்கக் கொடியை ஏற்றி அதன் கீழ் கார்ல் மார்க்ஸ், ஏங்கெலஸ், லெனின், செ.குரோவாபோன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களுடன் தமிழரசன், வீரப்பனின் தம்பி அர்ஜூனன் மற்றும்தர்மபுரி ரவீந்திரன் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அப்படங்களுக்கு வீரப்பனும், சேத்துக்குளி கோவிந்தனும் ராணுவ உடை அணிந்து வீர வணக்கம்செலுத்தினர். தமிழ் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மாறனும் வீர வணக்கம் செலுத்தினான்.
காட்டுக்குச் சென்று வந்த நக்கீரன் கோபால், இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ராணுவஉடையில் வீர வணக்கம் செலுத்தும் வீரப்பனின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications