சிறு தொழிற்சாலைகைள நவீனமயமாக்க இத்தாலி 5 மில்லியன் டாலர் உதவி
கோவை:
இந்தியாவில் உள்ள சிறு தொழிற்சாலைகளை நவீனமயமாக்க இத்தாலி 5 மில்லியன்அமெரிக்கன் டாலர் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது என இத்தாலி நாட்டின்வெளிநாட்டு பொருளாதாரத் துறைத் தலைவர் மார்கோ காண்டிசெல்லி கூறியுள்ளார்.
கோவை அருகே உள்ள அன்னூரில் விஜே லட்சுமி தொழிற்சாலையின் கட்டடத் திறப்புவிழா நடந்தது. விழாவில் இத்தாலியின் வெளிநாட்டு பொருளாதார, வர்த்தகத்துறையின் தலைவர் மார்கோ காண்டிசெல்லி கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே வர்த்தகத் தொடர்பு மேம்பட்டு வருகிறது.கடந்த சில காலங்களில் இந்த வர்த்தகத் தொடர்பில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
1999-ம் ஆண்டில் வர்த்தக அளவு 2 பில்லியன் அமெரிக்கன் டாலராக இருந்தது. இது23 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் இத்தாலி 400 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுசெய்துள்ளது.
வருங்காலத்தில் சுற்றுலாத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் முதலீடுசெய்ய ஆர்வமாக உள்ளது என்றார்.
விழாவில் மத்திய ஜவுளித் துறை கமிஷனர் கட்டாவ் பேசியதாவது:
தொழில் நவீனமயமாக்கல், தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவைவேலை வாய்ப்பை எந்த வகையிலும் குறைக்காது.
அதே சமயம், உற்பத்திச் செலவையும், நேர விரயத்தையும் கட்டுப்படுத்தும்.வெளிநாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை இறக்குமதிசெய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பல இயந்திரங்களைஇறக்குமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது. இந்த இயந்திரங்கள் அனைத்தும் சிலதேர்வு செய்யப்பட்ட விதிமுறைகளின் கீழ் உள்ளது.
இத்தாலியுடன் நமக்குள்ள உறவு வலுவானது. இரு நாடுகளும் இணைந்து ஜவுளிமேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
தெற்காசிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட பிறகு, ஜவுளி இயந்திரங்கள்ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இது தற்போது சீரடைந்து வருகிறது என்றார்.
விழாவில் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர்பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications