ராஜ்குமார் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் பிரச்சனையை யாரும் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர் சீனிவாச பிரசாத் பெங்களூரில்திங்கள்கிழமை தெரிவித்தார்.
பெங்களூர் வந்துள்ள மத்திய அமைச்சர் சீனிவாச பிரசாத், முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்:
ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் இரு மாநில அரசுகளும் திருப்திகரமாக செயல்பட்டு வருகின்றன. இரு அரசுகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமேமத்திய அரசு இப்பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், மேல் நடவடிக்கை குறித்தும் முடிவு செய்யும். வீணாக மத்திய அரசு இப்பிரச்சனையில் தலையிடாது.
தடா கைதிகள் விடுவிப்பில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவு வரும் வரை பொறுத்திருப்போம்.
ராஜ்குமாரை மீட்க, தொடர்ந்து பத்திரிக்கையாளரும், அரசுத் தூதருமான கோபால் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது சரியான முடிவுதான் என்றார்சீனிவாச பிரசாத்.


Click it and Unblock the Notifications
