"பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கவேண்டும்"
வாஷிங்டன்:
பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் உயர்அதிகாரி ஆர்தர் டேவிஸ் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காகுழுவின் ஆலோசகராகவும், பராகுவே மற்றும் பனாமா நாடுகளின் அமெரிக்கத்தூதராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்தர் டேவிஸ், அமெரிக்க பத்திரிக்கைக்குஅளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை சப்ளைசெய்து அந்த இயக்கத்தினரைத் தூண்டிவிட்டு பயங்கரவாத நடவடிக்கையில்பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானின் இச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அயர்லாந்திலும்,இஸ்ரேலிலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தற்போது அமைதிக்கும்,பொருளாதார மேம்பாட்டுக்கும் தங்களது கவனத்தைத் திருப்பி செயல்பட்டுவருகின்றனர்.
ஆனால், பயங்கரவாத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு தெற்காசியாவில் போர்ஏற்படக்கூடிய சூழ்நிலையை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. ஆனால், காஷ்மீரில் பயங்கரவாதநடவடிக்கைக்குக் காட்டும் ஆர்வத்தை பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் முயற்சியில்பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி காட்டவில்லை.
ஒரு புறம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்து அவர்களைத்தூண்டிவிடும் செயலைச் செய்து வரும் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி, மற்றொரு புறம்பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைப்பதற்கான வாய்ப்புகளைத் தடுத்து வருகிறது.
பாகிஸ்தானின் ஆட்சி நடத்தி வரும் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாராப் தன்னை ஒருபுரட்சிப் படைத் தலைவராகவும், லாகூர் அமைதிப் பிரகடனத்தை மதிக்காதவராகவும்செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவிலோ, பாகிஸ்தானிலோ எங்கு வசிக்க காஷ்மீர் பகுதி மக்கள்விரும்புகிறார்களோ அதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளும் என்பதுதான் லாகூர்பிரகடனம். ஆனால், அதை முஷாராப் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன்அமைப்பினர் தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவித்து இந்தியாவுடன் அமைதிப்பேச்சு நடத்த விரும்பம் தெரிவித்தனர்.
இதை ஏற்று தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தவும் இந்தியா சம்மதித்தது. ஆனால், இந்தஅமைதி திட்டத்தை தனது சதியால் பாகிஸ்தான் முறியடித்துவிட்டது. இப்போதுதீவிரவாதிகள் மீண்டும் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளைமேற்கொண்டுவிட்டனர்.
காஷ்மீரில் சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். அதற்குபாகிஸ்தான் தான் காரணம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இதுவரை 3முறை போர் நடைபெற்றுள்ளது. அந்த 3 முறையும் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிதான்நடைபெற்றது.
இப்போது முஷாரப் தலைமையிலான ராணுவ ஆட்சியின்போது 4-வது முறையாகபோர் ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் அணு ஆயுதங்களைப்பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
ஆகவே, பாகிஸ்தானை உடனடியாக பயங்கரவாத நாடாக அறிவிக்கவேண்டும்.அப்போதுதான் அந் நாட்டு மக்களும் ராணுவ ஆட்சியை உதறித் தள்ளிவிட்டு புதியஆட்சிக்கு அடிகோலுவார்கள் என்றார் டேவிஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications