ஆலோசனைக் கமிட்டி அமைக்க கோருகிறார்கள் தேயிலைத் தோட்ட அதிபர்கள்
கோவை:
அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தினால் ஏற்படும் போட்டியை சமாளிக்கஆலோசனைக் கமிட்டி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் தென்னிந்தியத் தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 107 வது ஆண்டு மாநாடுநடந்தது. இதில் இந்த சங்கத்தின் தலைவர் எம்.எச் அஷ்ரப் பேசியதாவது:
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும்பொதுவான விற்பனைச் சந்தை ஏற்படவுள்ளது. இதில் ஏற்படும் போட்டியைச் சமாளிக்கத் தேவையானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, மத்திய வர்த்தக அமைச்சகம், தோட்டப் பயிர் அதிபர்கள் சங்கம், 5 பெரும் தொழிற்சாலைகளின்பிரதிநிதிகள், மாநில அரசு நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழுவினர்சர்வதேச வர்த்தகத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இந்த வர்த்தகத்தில் விவசாய விளை பொருட்களின் பட்டியலில் தேயிலை, காபி, ஏலம், மிளகு உட்படதோட்டப்பயிர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இயற்கையாக விளையக் கூடிய ரப்பர் இடம் பெறவில்லை.
இந்த இயற்கை ரப்பரையும் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரப்பர் இறக்குமதிக்கு 25சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சின்தடிக் வகை ரப்பர் இறக்குமதிக்கு 40 சதவீத இறக்குமதி வரிவிதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை ரப்பர் இறக்குமதி வரியை உயர்த்தினால் மட்டுமே இங்குள்ள ரப்பர் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்புஏற்படாது.
வளர்ச்சி பெற்ற நாடுகளில், விளை பொருட்களின் விலையை சமச்சீராக வைத்துக் கொள்ள ஏற்றுமதியைமுறையாகப் பயன்படுத்துகின்றனர். இதே நிலையை இந்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.
தோட்டப் பயிர்களுக்கு வருமான வரி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த வரி விகித்தை குறைக்க வேண்டும்.தோட்டப் பயிர்களைப் பாதுகாப்பதிலும், பயிரிடுவதிலும் உள்ள சிரமங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
கலப்படப் பொருட்களினால் விளைபொருட்கள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்தக் கலப்படத்தைத் தடுக்ககலப்படத் தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இளைய தலைமுறையினரின் கவனம் எல்லாம்இப்போது குளிர்பானங்களின் மீது தான் உள்ளது.
இதனால் காபி, டீ போன்ற பானங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. பாரம்பரியமிக்க பானங்களானஎலுமிச்சை டீ, ஏலக்காய் டீ, டீ கோலா போன்ற பானங்களை மேம்படுத்த தோட்ட அதிபர்கள் முயற்சிமேற்கொள்ள வேண்டும் என்று அஷ்ரப் பேசினார்.
விழாவில் தோட்டப் பயிர்கள் ஆலோசனைக் கமிட்டிச் சேர்மன் ஜவஹரும் கலந்து கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications