வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாகிறது
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையும், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் கட்டாயமாக்கப்பட்டுவிடும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
சென்னையில் புதன் கிழமை குப்தா அளித்த பேட்டி:
இந்த தேர்தலில் புகைப்படம் ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது என்பதை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துவிடும். எனவே அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு விடும்.
அதேபோல் வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.
தற்போது நமது கைவசம் 9 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் உள்ளன. ஆனால், 55 ஆயிரம் இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குதேவை. அதோடு 25 ஆயிரம் இயந்திரங்கள் மாற்று உபயோகத்திற்கு கைவசம் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் 80 ஆயிரம் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இதில் பாதி இயந்திரங்களை வாங்க முடிவு செய்துள்ளோம். மீதியை தேர்தல் முடிந்த பக்கத்துமாநிலங்களில் இருந்து பெறத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் அடையாள அட்டை வழங்கும் பணி மிகவும் பின் தங்கியிருப்பதாக தலைமை தேர்தல் கமிஷன் கண்டித்துள்ளது உண்மை தான். அடையாள அட்டைவழங்குவதில் கேரளாவும், மேற்கு வங்காளம் மிகவும் மெதுவாக செயலபடுகின்றன. அவற்றை விட தமிழகம் மெதுவாக செயல்படுகிறது என்றுதலைமை தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதற்கு காரணம் தவறான அடையாள அட்டைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டது தான். இவற்றை கண்டுபிடித்து மாற்றுவதற்கு அதிக காலம் ஆகிவிட்டது.
இந்த மாத இறுதிக்குள் எல்லா மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் பணி நடைபெறும். நவம்பர் மாதத்தில் மீண்டும்வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும். விடுபட்டவர்களுக்கு அட்டைகள் வழங்க வாய்ப்பு தரப்படும்.
நவம்பர், டிசம்பருக்குள் எல்லா வாக்காளர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி முடித்து தேர்தலுக்கு தயாராகி விடுவோம் என்றார் குப்தா.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications