ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக ஜெயின் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக என்.கே.ஜெயின் புதன்கிழமை பதவியேற்றார். கவர்னர் பாத்திமா பீவி அவருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் என்.கே.ஜெயின். அவரையே தலைமை நீதிபதியாக ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் நியமித்தார்.
அதன்படி அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை ராஜ்பவனில் நடைபெற்றது. கவர்னர் பாத்திமா பீவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு விழா நடத்தப்பட்டது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட்ஜெனரல், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் ஆகியோர் பேசினர்.












Click it and Unblock the Notifications