பேராசிரியையை கிண்டல் செய்த பேராசிரியர்
திருச்சி:
கல்லூரி பேராசிரியையை ஈவ் டீசிங் செய்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாணவர்கள் மத்தியில் பிரபலமான இந்த ஈவ் டீசிங் தொல்லை இப்போது கல்லூரி ஆசிரியர்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. அரியலூர் அரசுகலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் பாஸ்கர் (35). அதே கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிபவர் கோமளவல்லி (26).
இருவரும் ஒரே கல்லூரியில் பணிபுரிவதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். சக ஆசிரியர் என்ற முறையில் சகஜமாக பழகிய கோமளவல்லியின் மீதுபாஸ்கருக்கு ஒரு "கண். மாணவர்களை மறந்து கோமளவல்லியையே சுற்றியே வந்தார். விஷயம் புகாராக கல்லூரி முதல்வரிடம் போனது.
அவர் பாஸ்கரை அழைத்து கண்டித்துள்ளார். அப்படியும் கேட்காததால் பாஸ்கர் ஊட்டிக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்தும் அவர் விடவில்லை. தொலைபேசியில்கோமளவல்லியில் ஈவ் டீசிங் செய்தாராம்.
இந்நிலையில் கோமளவல்லிக்கும் திருச்சி பல்கலைக்கழக சர்வேயர் ஒருவருக்கும் திருமணம் முடிந்தது. இந்த தகவல் தெரிந்தும் பாஸ்கர் திருந்த வில்லை.திருச்சி பல்கலைக் கழகத்தில் ஒரு பயிற்சி வகுப்புக்கு எல்லா பேராசிரியர்களையும் அழைத்திருந்தனர். அதன்படி பாஸ்கரும் வந்திருந்தார். கோமளவல்லியும்அங்கே இருந்தார்.
பயிற்சி வகுப்புக்கு போகும் பாதையில் கோமளவல்லியை பின்தொடர்ந்து வந்த பாஸ்கர், அவரிடம் குறும்பு செய்துள்ளார். கையை பிடித்து இழுத்து ஈவ்டீசிங்கில் ஈடுபட்டதாக போலீசில் கோமளவல்லி புகார் செய்தார். அதன்பேரில் பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications