பிரச்சினைகளில் இருந்து மீளுமா இந்திய வைரத் தொழில்?
லண்டன்:
இந்திய வைரத் தொழில் கடுமையான நெருக்கடியில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிவரை இப் பிரச்சினை நீடிக்கும் என்று ஆன்ட்வெர்ப்பில் உள்ள மொத்த வைரவியாபாரிகள் தெரிவித்தனர்.
உலகிலேயே மிகப்பெரிய வைரச் சந்தையாக விளங்குவது பெல்ஜியம் தலைநகரானஆன்ட்வெர்ப். இதுதான் உலகின் மிகப்பெரிய கச்சா வைர மார்க்கெட்.
இந்த ஆண்டு இறுதி வரை இந்திய வைரத் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநீடிக்கும். அதற்குப் பிறகு பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்படும்.
ஆனால், இந்தியாவில் உள்ள வைரம் வெட்டும் மற்றும் பட்டை தீட்டும் தொழிலில்எந்த முன்னேற்றமும் இருக்காது என்று ஆன்ட்வெர்ப்பில் உலகின் மிகப் பெரிய ரோசிபுளூ என்ற வைர விற்பனைக் கடையின் உரிமையாளர் திலீப் மேத்தா கூறியுள்ளார்.
இந்திய வைரச் சந்தை நெருக்கடிக்கு உள்ளானதற்கு இந்திய வைர வியாபாரிகளேகாரணம். கடந்த ஆண்டு வைரத்துக்கு கடுமையான டிமாண்ட் ஏற்பட்டது.
இதனால், நாளை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஏராளமான கச்சா வைரத்தைபெல்ஜியத்திலிருந்து தருவித்து அவற்றைப் பட்டை தீட்ட இந்திய வைர வியாபாரிகள்முயன்றனர்.
அதற்காக இந்திய வியாபாரிகளுக்கு அதிக அளவு பணமும் கொடுக்கப்பட்டது.ஆனால், நிலைமை வேறு விதமாக மாறிவிட்டது.
வைரச் சந்தையில் அப்போதைக்கு ஏற்பட்ட நிலைமையைைச் சாதமாகப்பயன்படுத்திக் கொள்ள முற்பட்டு இந்திய வைர வியாபாரிகள் பிரச்சினையை உண்டுபண்ணி விட்டனர்.
அமெரிக்காவில் வைரத்துக்கு தொடர்ந்து டிமாண்ட் உள்ளது என்றாலும், அந்த ஒரேஒரு விற்பனைச் சந்தையை வைத்து எதையும் சாதிக்க முடியாது.
இந்தியாவில் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் சிறந்து விளங்கும் சூரத்தில் பலர்வேலை இழப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டனர்.
வைரச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றவியாபாரிகள் அதில் அவர்களே சிக்கிக் கொண்டனர்.
வைரம் பட்டை தீட்டுவதற்கு கடந்த ஆண்டு அதிக பணம் பெற்ற இந்திய வைரவியாபாரிகள் தங்கள் விலையைக் குறைக்க முன் வரவில்லை. இதுவே இந்திய வைரத்தொழில் பிரச்சினைக்குள்ளானதற்குக் காரணம்.
ஏற்கெனவே இந்தியாவுக்கு கச்சா வைர இறக்குமதி குறைந்துவிட்டது. நிலைமையைப்புரிந்து கொண்டு பிரச்சினையில் இருந்து மீண்டு வர இந்திய வியாபாரிகள் முயற்சிக்கவேண்டும். இல்லையென்றால் பிரச்சினை மேலும் சிக்கலாகிவிடும்.
இந்த ஆண்டுக்குள் பிரச்சினை ஓரளவு சீராகும் என்றாலும், பிரச்சினை முற்றிலும்தீர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது என்றார் திலீப் மேத்தா.
கச்சா வைரத்துக்கு மிகப் பெரிய சந்தையாக ஆன்ட்வெர்ப் விளங்கினால், இந்தியாவில்உள்ள மும்பையும், சூரத்தும் உலகின் மிகப் பெரிய வைரம் பட்டை தீட்டும்மையங்களாகும்.
உலகில் விற்கப்படும் 10 வைரங்களில் 7 வைரங்கள் இந்தியாவில் பட்டைதீட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications