4 கல்யாணம் .. 20 குழந்தைகள் .. 90 வயது .. மனதில் தேசப்பற்று
பரத்பூர்.
நான்கு கல்யாணம் ... 20 குழந்தைகள் ... 90- வயது. என்ன மலைப்பாக இருக்கிறதா? தொடர்ந்துபடியுங்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் மேவாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹாஸி செளவ் கான்.இவருக்கு வயது 90. ஆனால் அந்த வயதுக்குரிய தளர்ச்சி இல்லாமல், துறுதுறுப்பாகவும்,சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்.
காலையில் சுறு சுறுப்பாக ஒரு வேக நடை போடுவது கானின் வழக்கம். ஒயின், ஆல்கஹால், சிகரெட்ஆகியவற்றைத் தொடுவதை மகா பாவம் என்று நினைப்பவர். அப்போதுதான் ஒருவர்ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர் கான்.
கானுக்கு நான்கு மனைவிகள். அவர்கள் மூலம் 20 குழந்தைகள். இவர்களில் 8 மகன்கள், 12மகள்கள் அடக்கம். தனது கிராமத்தின் முஸ்லீம் வக்ப் நிர்வாகத்தை இந்த வயதிலும் சிறப்பாகநிர்வகித்து வருகிறார். அவருக்காக ஒரு அலுவலக அறை கூட உள்ளது.
மதரசா எனப்படும் பள்ளிவாசலில் கான் வந்து விட்டால் களை கட்டி விடும். இறுக்கமான சூழ்நிலைஇருந்தால்கூட அதை தனது பேச்சால், சரி செய்து விடுவார் கான்.
கானின் குடும்பத்தில் மொத்தம் 50 உறுப்பினர்கள் உள்ளனர். தனது பேரன்களின் பெயர்களை அவரால்சரியாகச் சொல்ல முடியாது. அவர்களில் பலரை அவருக்கு நினைவில்லை. நான்கு முறை கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும், 2 மனைவிகள் இறந்து விட்டனர். மூன்றாவது மனைவி, பாகிஸ்தான்பிரிந்தபோது, அங்கு சென்று விட்டார்.
தனது குழந்தைகளில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பது கூட கானுக்குத் தெரியாது.10-12 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறுகிறார் அவர்.
கானுக்கு அவரது பிறந்தநாள் சரியாகத் தெரியாது. 1935-ல் 8-வது வகுப்பு பாஸ் செய்ததாகமட்டும் கூறுகிறார்.
அமைதியான முறையில் இறக்க வேண்டும் என்பதே கானின் விருப்பம். இந்துக்களும், முஸ்லீம்களும்அமைதியுடனும், சகோதர உணர்வுடனும் வாழ வேண்டும் என்கிறார் கான். ஜாதிக் கலவரங்கள்,இனக் கலவரங்கள் அவரைக் கவலைப்படுத்துகின்றன.
90 வயதிலும் சமூகம் குறித்தும், கலவரங்கள் குறித்தும் கவலைப்படும் கான், அனைத்து மக்களும்அமைதியாக, சண்டையின்றி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.
கான் கனவை நிறைவேற்றுவோமா?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications