ராஜ்குமாரை மீட்பதே லட்சியம் ..கர்நாடக முதல்வர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

நடிகர் ராஜ்குமாரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு அவரை பத்திரமாக மீட்பதுதான் கர்நாடக அரசின் குறிக்கோளாகும் என்றுஹைதராபாத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் தேசிய போலீஸ் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணாகருத்தரங்கு முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். மிகவும் அமைதியாக, சுமூகமாகத்தான் அவரைமீட்க முடியும். இந்த விஷயத்தில் தமிழக, கர்நாடக அரசுகள் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

கான்டகரில் கடத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் பயணிகளை மீட்கவும், காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட முன்னாள் மத்திய உள்துறைஅமைச்சர் முப்தி முகமது சையத் மகளை மீட்கவும் இதுபோன்ற திட்டங்கள் தான் பயனளித்தன.

ராஜ்குமார் கடத்தல் விவகாரம் ஒரு தனிப்பட்ட பிரச்சனையல்ல. கர்நாடக மாநில மக்கள் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றார்முதல்வர் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+