சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு வருகிறேன் .. வீரப்பனுக்கு கோபால் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மைசூர் தமிழ்த் தடா கைதிகள் மற்றும் ஐந்து தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலைதொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பிறகு வந்து பார்ப்பதாகசந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு, நக்கீரன் ஆசிரியரும், அரசுத் தூதருமான கோபால்செய்தி அனுப்பியுள்ளார்.
சென்னை வானொலி மூலம் இந்தச் செய்தியை கோபால் அனுப்பியுள்ளார். கைதிகள்விடுதலை குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் தகவல் தெரிவிக்குமாறு கோபாலுக்குஅறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து சென்னை வானொலியில் கோபால்செவ்வாய்க்கிழமை பேசினார்.
அதில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன், நானே நேரில் வந்துசந்திக்கிறேன் என்று வீரப்பனுக்கு கோபால் தெரிவித்தார்.
ராஜ்குமார் விவகாரத்தில், கைதிகள் விடுதலையில் வீரப்பன் பிடிவாதமாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications