இன்று பதில் மனு தாக்கல் செய்கிறது கர்நாடகம்?
பெங்களூர்:
தடா கைதிகள் விடுவிப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனுத் தாக்கல் செய்வதற்காக கர்நாடக அதிகாரிகள் இருவர் டெல்லி விரைந்தனர்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமெனில் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன்நிபந்தனை விடுத்திருந்தான்.
இதன்படி, அவர்களை விடுவிப்பது என்று கர்நாடக அரசு தீர்மானித்தது. ஆனால் 1992 ம் ஆண்டு வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடகஎஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் கைதிகளை விடுவிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று கூறி சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதுதொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்என்றும் அது கேட்டுக் கொண்டது.
அதன்படி புதன்கிழமை கடைசி நாள் என்பதால், கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக சிறப்பு அதிரடிப்படை தலைவர்ஹர்ஷவர்த்தன்ராஜூ மற்றும் மைசூரைச் சேர்ந்த அரசுத் தரப்பு வக்கீல் அஸ்வின் குமார் ஜோஷி ஆகியோர் திங்கள்கிழமை இரவு டெல்லி சென்றனர்.
இவர்கள் இருவரும் டெல்லி செல்லுமுன் கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயுடன் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனைநடத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications