மேற்கு வங்க மாவட்டத்திற்கு மத்திய போலீஸ் அனுப்ப பரிந்துரை
டெல்லி:
மேற்கு வங்காள மாநிலம், மித்னாப்பூர் மாவட்டத்தை கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அங்கு மத்திய எல்லைப் பாதுகாப்புபோலீஸாரை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும் என்றும் 5 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது.
மேற்குவங்காளத்தில் மித்னாப்பூர் மாவட்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும், திரினாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும்இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி படுகொலைகள், தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்து காணப்படுகிறது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இப்பிரச்சினை குறித்துக் கவனிக்குமாறு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் பிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டார். இதையடுத்துதெலுங்குதேச எம்.பி வேணுகோபாலாச்சாரி தலைமையில் ஐந்து எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், பாரதீய ஜனதா,திரினாமூல் காங்கிரஸ் , சமதா கட்சி, சிவசேனை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழுவினர் ஆகஸ்ட் 11, 12 ம் தேதிகளில் மித்னாப்பூர் சென்று குறித்து விசாரணை நடத்தினர். கலவரம் தொடர்ந்து நடந்து வரும் மித்னாப்பூர்மாவட்டத்திலுள்ள கிராமவாசிகள் பலரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை, ராணுவ அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசிடம் கொடுத்தனர். பின்னர் பெர்னாண்டசே நேரடியாக மித்னாப்பூர் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை மேற்கொண்டார். மித்னாப்பூர் நிலவரம்குறித்து உள்துறை அமைச்சர் அத்வானியிடம் தனது கருத்தைத் தெரிவித்தார்.
மித்னாப்பூர் நிலவரம் குறித்து வேணுகோபாலச்சாரி கூறுகையில், மித்னாப்பூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்து காணப்படுகிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திரினாமூல் தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அங்குள்ள மக்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். சிறுபான்மையினர், முஸ்லீம்கள், தலித்துக்கள் ஆகியோர்அதிக அளவு தாக்கப்படுகின்றனர்.
முஸ்லீம்களின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன. அங்குள்ள மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். கலவரத்தை அடக்குவதற்கு உடனடியாகநடவடிக்கை எடுக்கவில்லையெனில் அம் மிகப் பெரிய அளவில் வன்முறை ஏற்படும் வாய்ப்புள்ளது. கிராம மக்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை எனஅறிக்கையில் கூறியுள்ளதாக வேணுகோபாலாச்சாரி தெரிவித்தார்.
மேற்கு வங்காள மாநிலத்திலேயே மிகப் பெரிய மாவட்டம் மித்னாப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 5 எம்.பி.க்களும், 37 எம்.எல்.ஏ.க்களும்உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications