மக்களை "அழ வைத்த வெங்காய விவசாயிகள் போராட்டம்
திருநெல்வேலி:
வெங்காயத்துக்கு நியாய விலை நிர்ணயிக்கக் கோரி சாலையில் வெங்காயத்தைக் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். தென்காசி அருகேயுள்ளபாவூர்சத்திரத்தில் புதன்கிழமை மாலை இச் சம்பவம் நடந்தது.
பாவூர்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெங்காயம், மிளகாய், தக்காளி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால், அவற்றுக்குநியாயமான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால், விவசாயிகள் பெரிதும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர்.
ஆகவே, பெல்லாரி வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 என்றும், மிகாய் வற்றலுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் என்றும் விலைநிர்ணயம் செய்யவேண்டும் என்று அப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயத்தைச் சாலையில் கொட்டி நூதன முறையில் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்துபாவூர்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அவர்கள் வெங்காயத்தைக் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இப் போராட்டத்துக்கு இ. கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழப்பாவூர் கிளை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
சாலையில் கொட்டப்பட்ட வெங்காயத்தின் மீது வாகனங்கள் சக்கரங்கள் ஏறி நசுக்கின. இதனால், வெங்காயத்தின் நெடி காற்றில் பரவியதால் அப் பகுதிமக்களின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications