கைதிகள் தாக்கி நான்கு போலீசார் காயம்
தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் போலீஸாரூடன் கைதிகள் மோதினார்கள். இதில் நான்கு போலீஸார் காயமடைந்தனர்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள 29 கைதிகளை கும்பகோணம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காககும்பகோணம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் பத்து போலீஸார் ஒரு வேனில் அழைத்துவந்தனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்வதற்காக போலீஸார் அவர்களை வேனில் ஏற்றினர்.
அப்பொழுது கும்பகோணம் கிழக்கு போலீஸில் ஒரு வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட செம்பட்டை என்ற ஜெயப்பிரகாஷ் என்கிற கைதிபோலீஸாரிடம் இருந்து தப்பி ஒடினான்.
போலீஸார் அவனை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றனர். கைதியை தொடர்ந்து விரட்டிச்சென்ற போலீஸார் ஒரு வழியாக அண்ணாநகர் என்ற இடத்தில்அவனைமடக்கி பிடித்து நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தனர்.
தங்களை ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய கைதி செம்பட்டைக்கு போலீஸார் அடி உதை கொடுத்தனர். இதைக்கண்ட மற்ற கைதிகள் போலீஸாரைதாக்கினார்கள்.
இதனால் போலீஸாருக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர்கள் பரமசிவம், ஸ்டீபன், ராஜா,ஆனந்தகுமார் ஆகிய நான்குபேர் பலத்த காயம் அடைந்தனர்.
போலீஸ் வேனும் சேதம் அடைந்தது.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் கும்பகோணம் டி.எஸ்.பி ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு போலீஸாருடன் விரைந்து சென்று அமைதிஏற்படுத்தினார்கள். பின்னர் கைதிகள் அனைவரையும் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அவர் அழைத்துச் சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications