தமிழர்களைத் தாக்கியவர் ரஜினி .. நக்சலைட்டுகள் குற்றச்சாட்டு
பெங்களூர்:
ராஜ்குமார் கடத்தலில் நடிகர் ரஜினிகாந்த் அதிக அக்கறை காட்டுவதற்கு எதிர்ப்புதெரிவித்தும், பெங்களூரில் தமிழர்களைத் தாக்கியவர் ரஜினிகாந்த் என்று கூறியும்தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் புத்தகம் வெளியிட்டுள்ளன.
வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 45 நாட்கள் ஆகிவிட்டன. அவரைவிடுவிக்க வீரப்பன் விடுவித்த கோரிக்கைகளை தமிழக. கர்நாடக அரசுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் மைசூர் சிறையில் இருக்கும் 121 தடா கைதிகளை விடுவிக்கசுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் ராஜ்குமார் விடுதலை தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பெங்களூர் வந்து கர்நாடகமுதல்வரையும், ராஜ்குமார் குடும்பத்தாரையும் சந்தித்து பேசினார்.
இந்தச் சூழ்நிலையில் ரஜினிகாந்த்தை கடுமையாக கண்டனம் செய்து சேலம் பகுதியில்வீட்டுக்கு, வீடு ஆறு பக்க புத்தகம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், பெங்களூரில் தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்கியதில்முன்னணியில் இருந்தார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரப்பன் ஆதரவாளர்கள் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அந்த சிறு புத்தகத்தின்கடைசி மூன்று பக்கங்கள் ரஜினியை விமர்சனம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. தூயதமிழில் எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தகத்தில், உங்களுக்குத் தெரியுமா என்றகேள்வியோடு ரஜினிகாந்த் கன்னட சளுவளி இயக்கத்தில் வானாள் உறுப்பினர் என்றதலைப்பில் தாறுமாறாகத் திட்டப்பட்டுள்ளது.
புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் வெறிநாய்கள் போல்சுற்றித் திரியும் ஒரு அமைப்புதான் வாட்டாள் நாகராஜ் நடத்தும் கன்னட சளுவளிபக்ஷா என்ற கன்னட இயக்கம்.
இந்த இயக்கத்தில் ரஜினிகாந்தும் அவரது குடும்பத்தினரும் வெறி கொண்டஉறுப்பினர்கள். 1992-ம் ஆண்டு சனவரி 4-ம் தேதி ஒரு பத்திரிக்கைக்கு வாட்டாள்நாகராஜ் கொடுத்த பேட்டி இதை தெளிவாக்கும். வாட்டாள் கூறுகிறார்:
ரஜினிகாந்தும் நம்ம பையன்தான். அவரது குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும்.அவர் ஒரு பணி மனையில் மூட்டை தூக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அந்தநேரத்தில் நான் கன்னட பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நடத்திக்கொண்டிருந்தேன்.
அந்த அமைப்பில் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த் தீவிர உறுப்பினர். இங்கு ஏதாவதுதமிழர் கடைகளை அடிக்கிறோம் என்றால் அதற்கு முதலில் நிற்பது ரஜினிகாந்த்தான்.
கன்னட மன்னனை இழிவு படுத்தும் காஞ்சித் தலைவன் என்ற படம் இங்கு வந்தபோது தமிழர் கடைகளை அடித்து நொறுக்கியதில் முதலில் நின்றது ரஜினிகாந்த்தான்.இப்போதும் கூட அவர் எங்கள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்.
திரைப்படம் எடுக்க பெங்களூர் வந்தாரென்றால் அவர் எங்களை வந்து பார்ப்பார்.ஏதாவது உதவி செய்வார். சொந்த கட்டிடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடைதருவதாகக் கூறியுள்ளார்.
அவர் குடும்பமே இந்த அளவிற்கு ஈடுபாடு காட்டும் போது, அவர் கன்னடதமிழர்களுக்காக படையெடுத்து வருவேன் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஏதோ அவர் தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக இப்படிஒரு இரட்டை வேடம் போடுகிறார் என்று நான் கருதுகிறேன். அவரின் அண்ணன்உண்மை நிலைமையை சொல்லியிருகிகறார். அவர் நம்ம பையன். நாம் அவரைபுரிந்து கொள்ள வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதாக புத்தகத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம், மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இந்த புத்தகம்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காவிரிக் கலவரம் ஏற்பட ராஜ்குமார்,பங்காரப்பா, வாட்டாள் நாகராஜ் ஆகியோரே காரணம் என இந்தப் புத்தகத்தில்கடுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவையும் இவர்கள் விடவில்லை. கன்னடப் பெண்ணான ஜெயலலிதா இனவெறி காரணமாகவே ராஜ்குமாரை விடுவிக்க, வீரப்பனை ராணுவத்தைக் கொண்டு சுடவேண்டும் என கூக்குரல் போடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் குறித்து தமிழக உளவுத்துறை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications