பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பெண் போலீஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் 5வது பிரிவில் பெண் போலீஸ்காரராக பணி புரிந்தவர் டெய்சிராணி (23). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த பர்னிச்சர்கடை அதிபர் முத்துக்குமார் என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
டெய்சிராணி வேலை காரணமாக தூத்துக்குடியில் இருக்க வேண்டிய நிலைமை. இதனால் சிவகாசியில் கணவர் தனியாக இருந்தார். கல்யாணம் முடிந்தும்பிரம்மச்சாரியாக வாழ வேண்டியதிருக்கிறது என்று மனைவியிடம் ஆத்திரப்பட்டு வந்தாராம் அவர்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. கணவரின் கோபம் காரணமாக சம்பவத்தன்று இரவும் பணியை முடித்து கேம்ப்ஆபிசிலேயே தங்கி விட்டார். இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டிருந்த அவர் அதிகாலை எழுந்து வெளியே சென்றார்.
அப்போது அவருடன் தங்கியிருந்த மற்ற பெண் போலீசார் எழுந்து எங்கே செல்கிறார் என்று விசாரித்துள்ளனர். "பாத்ரூம் போக வேண்டும் என்று பொய்சொல்லி விட்டு வெளியே வந்த டெய்சி, அலுவலகத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த புதர் பகுதிக்கு சென்றார்.
அங்கு துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்து பார்த்த போது மூளை சிதறிஇறந்து கிடந்தார் டெய்சி.
இச்சம்பவம் தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications