பெண்கள் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவுக்குக் கடைசி இடம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

சிட்னி ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் பிரிவில் இந்தியாவின்அஞ்சலி வேதபதக் கடைசி இடம் பிடித்தார்.

பெண்களுக்கான துப்பாக்கிச் சுடும்பிரிவில் இந்தியாவின் சார்பில் இவர் ஒருவர்தான்ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.

சனிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவர் தகுதிச் சுற்றுப் போட்டியில்வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும்போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர்பெற்றார்.

ஆனால், இறுதிச் சுற்றில் அவர் கடைசியாக 8-வதாக வந்தார். இப் பிரிவில் 49 பேர் கலந்துகொண்டனர். தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களைப் பெற்றவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

இந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அமெரிக்காவின் நான்சி ஜான்சன் தங்கப் பதக்கம்வென்றார். தென் கொரியாவுக்கு வெள்ளியும், சீனாவுக்கு வெண்கலமும் கிடைத்தது.

இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை நான் நன்றாகவே செயல்பட்டேன். எனது அடுத்த இலக்கு 2002 ஆசியப்போட்டிதான் என்றார் அஞ்சலி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+