உயர் நீதிமன்றத்தில் தமிழில் விசாரணை நடத்த வேண்டும்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள், தகவல் பரிமாற்றங்களை தமிழ் மொழியில் நடத்த தமிழக அரசுக்குஉத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவர் தமிழில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.உயர்நீதிமன்ற வக்கீல்கள் தமிழ் மன்ற செயலாளராக இருக்கும் இவரது மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆங்கிலமே நீதிமன்ற மொழியாக இருந்து வந்தது. கடந்த 1976ம் ஆண்டு தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவுப்படி மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், தீர்ப்பாயம்(டிரிபுயூனல்) ஆகியவைகளில் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக நடைறைப்படுத்தப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் மக்கள் மொழியில் இருந்தால் தான் வழக்கு நடத்த நீதிமன்றத்துக்கு வரும் மக்கள்,வழக்கு விவரங்களை புரிந்து கொள்ள முடியும். மக்களுக்கு தெரிந்த மொழியில் சட்டம் இயற்றுதல், நிர்வாகம் செய்தல், கல்விகற்பித்தல், நீதி நிர்வாகம் செய்தல் ஆகியவை மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படை கோட்பாடு.
உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆங்கிலம் அல்லாமல் அந்தந்த நாட்டு மொழியில் தான் அரசின் அனைத்துநடவடிக்கைகளும் இருந்து வருகின்றன. பிரான்ஸ், கொரியா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, சீனா மற்றும் அரபு நாடுகளில் மக்கள்மொழியில் தான் நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு 348(1)ன்படி, உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் நடைபெறவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348(2)ல் ஒரு மாநிலத்தின் கவர்னர், ஜனாதிபதியின் முன்அனுமதி பெற்று அம்மாநில மொழியை உயர் நீதிமன்றத்தில் அமல்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் முடிவடைந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை நடைறைப்படுத்துவதற்குதமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் இந்தி மொழியை பயன்படுத்தஉத்தரவிடப்பட்டு, அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்தியில் தான் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
அதேபோல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும் இந்தி மொழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழ் மொழியை அமல்படுத்துவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications