ஹாக்கி: பதக்கக் கனவின் முதல் படியில் இந்தியா
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற நோக்கில் கனவில் உள்ள இந்தியஅணி தனது கனவை நனவாக்கும் முயற்சியின் முதல்கட்டமாக அர்ஜென்டினாவைஎதிர்த்து ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு இந்த ஆட்டம் மிக முக்கியமானஆட்டமாகும். கடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கிலும் முதல் ஆட்டத்தில்அர்ஜென்டினாவை எதிர்த்து இந்தியா விளையாடியது.
ஆனால், அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி அந்த ஒலிம்பிக்முழுவதும் தொடர்ந்தது. அதனால், எப்போதும் இல்லாத அளவில் பட்டியலில் மிகமோசமாக 8-வது இடத்தை இந்தியா பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய மோசமான நிலை சிட்னியில் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நிலையில் நன்குபயிற்சி பெற்று புதிய ஆட்ட நுணுக்கங்களுடன் இந்திய அணி புதிய தெம்புடன்சிட்னியில் விளையாடுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை இந்தியாவெல்லும்பட்சத்தில் அந்த வெற்றி இந்திய அணியினருக்குப் புதிய உற்சாகத்தையும்உத்வேகத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1980-ம் ஆண்டுக்கு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா கடைசியாக தங்கம் வென்றது.அதற்குப் பிறகு ஹாக்கியில் இந்தியாவுக்கு எந்தப் பதக்கமும் கிடைக்கவில்லை.மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த பாஸ்கரன்தான் இந்தமுறை இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை மற்ரும் முகேஷ் குமார்இவரும் இப்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர். நிறைய போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவசாலிகள். 3-வது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடும் இவர்களதுகையில்தான் இந்திய அணியின் வெற்றி உள்ளது.
இவர்களுக்கு உதவியாக முகம்மது ரியாஸ் மற்றும் கேப்டன் ரமன்தீப் சிங் ஆகியோரும்விளையாடி வெற்றி தேடித் தருவார்கள் என்று பயிற்சியாளர் பாஸ்கரன் நம்புகிறார்.
அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஸ்பெயின், தென் கொரியா,போலந்து ஆகிய நாடுகளை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. முதல் ஆட்டத்தில்கிடைக்கும் வெற்றி அடுத்த தொடர் வெற்றிக்கு வித்திடலாம்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications