சிறைக்குப் போனால் பதவி, பரிசு: இது தான் த.மா.கா.
சென்னை:
வரும் 27-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கிறார் மூப்பனார். விவசாயிகள் பிரச்சனை, தமிழகத்தில் மட்டும்சிமெண்ட் விலைஉயர்வு, நெசவாளர்கள் பிரச்சனை உள்பட பதினைந்து கோரிக்கைகளுடன் போராட்டக் களத்தில்முதல்முறையாகக் குதிக்கிறார் மூப்பனார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் த.மா.கா சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்ற நிலையில் ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பிப் பார்கின்ற வகையில் அதேநேரத்தில் இமேஜூம் கூடுகின்ற மாதிரி ஏதாவது செய்யவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது த.மா.கா.
மக்களிடையே இமேஜ் அது ஒருபக்கம் இருந்தாலும் கூட, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தன்னுடைய பலத்தைகாட்டியாகவேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறது த.மா.கா.
இதற்காகத்தான் போராட்ட களத்தில் குதித்திருக்கிறார்கள். இந்த சிறை நிரப்பும் போராட்டத்திற்கு மற்ற அரசியல் கட்சிகள்யாரையும் அழைக்கவில்லை மூப்பனார்.
234 தொகுதிகளிலும் குறைந்தது 2,000 பேர் கைதாக வேண்டும். 27-ம் தேதி தொகுதிகளில் உள்ள முக்கியமான அரசுஅலுவலகங்களின் மறியல் போராட்டம் நடத்தவேண்டும். பதினைந்து அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாதவரைஅங்கிருந்து நகரக்கூடாது.
அரசு கைது செய்யும். அதற்கும் கவலையில்லை என்று சிறை செல்லுங்கள். குறைந்தது ஒரு தொகுதிக்கு இரண்டாயிரம் பேராவதுசிறைக்குச் செல்ல வேண்டும். அப்படி சிறைக்குச் செல்லும் த.மா.காவினர் வீரர்களாக கருதப்படுவார்கள்.
இதற்காக, த.மா.காவில் பிரிக்கப்பட்ட 51 மாவட்டங்களிலும் சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேடையில்பேசுவது தவிர ஆங்காங்கே த.மா.கா தலைவர்கள் ஸ்பெஷல் கூட்டங்களையும் தொண்டர்கள் மத்தியில் கூட்டுகிறார்கள்.
உழைப்பவர்கள், உண்மைத் தொண்டர்களை கண்டுகொள்வதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கம். நம்முடையபோராட்டத்தின் மூலமாகத்தான் த.மா.காவின் எதிர்காலம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
போராட்டத்தில் பங்கு பெறும் வீரர்கள் ஒவ்வொருவருவரையும் போராட்டம் முடிந்த பிறகு தலைவர் சந்திப்பார். வாழ்த்துக்கள்மட்டுமல்ல, சிறப்பு பரிசுகளும் உண்டு.
போராட்டம் முடிந்த பிறகு, தமிழகம் முழுக்க த.மா.காவில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்கின்ற தொண்டர்களிடம் பெரிய பெரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
அடுத்த தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைக் கூட இந்தப் போராட்டத்தின் அடிப்படையிலேயேதேர்ந்தெடுக்கப் போகிறோம் என்று உணர்ச்சிபூர்வமாக போராட்டத்திற்கு தொண்டர்களை தயார்படுத்தி வருகிறார்கள் த.மா.காதலைவர்கள்.
எல்லாத் தலைவர்களும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை. முதல்கட்டமாக எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம்,பூவராகவன் இருவர் தலைமையில் நடத்தப்படும். தொகுதியளவில் எல்லாத் தலைவர்களுமே இந்தப்போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
முதல்கட்டமாக ஈடுபடும் தொண்டர்களை, தலைவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தால் தொடர்ந்து தொண்டர்கள்மறுபடியும் மறியல், சிறை என்று தயாராக வேண்டும். இரண்டு கட்டத்திற்கும் மேல் போராட்டம் தொடர்ந்தால், தொண்டர்களைவிடுதலை செய் என்று ஆவேசமாக களமிறங்குவார் மூப்பனார்.
இப்படி சுதந்திரப் போராட்ட ரேஞ்சில் த.மா.கா தயாராகிக்கொண்டிருக்கிறது.
எந்தத் தொகுதியில் இருந்து அதிகமான அளவு தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்களோ அந்த தொகுதியில்இருந்து போராட்டத்திற்கு தலைமை தாங்கும் தலைவர்களுக்கு சிறப்பு பரிசுகள், தொண்டர்களுக்கும் பரிசுகள் என்றுதிராவிடக்கழகங்களின் பாணியில் பல அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் இறங்கப்போகிறாரார்களாம் த.மா.கா தலைவர்கள்.
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இந்த போராட்டத்திற்கு பிறகு த.மா.காவின் செல்வாக்கை என்று மீசையை முறுக்கிவிட்டுஉறுதியுடன் பேசுகிறார்கள் த.மா.கா தலைவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications