பெரியாறு அணை விவகாரம்: நிபுணர் குழுவைக் கூட்ட மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக 4 வாரத்துக்குள் நிபுணர்குழுவைக் கூட்டவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்இந்த உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.
சுவாமி மனு விவரம்:
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்துக்கு இடையே பெரியாறு ஆற்றுக்குக் குறுக்கேமுல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டத்தை 136அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த உத்தரவிடவேண்டும்.
அணை இடிந்து விடும் என்று பத்திரிக்கைகளில் வெளியான செய்தியை அடுத்துஅணையின் நீர்மட்டத்தை 136 அடியாக கேரள அரசு குறைத்துவிட்டது. அதற்கு முன்அணையில் 152 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
நீர்மட்டத்தின் அளவை கேரள அரசு குறைத்ததால் தமிழ்நாட்டில் விவசாயத்துக்குத்தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று தனது மனுவில் சுவாமி கூறியிருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலானநீதிபதிகள் சந்தோஷ் ஹெக்டே, கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச்விசாரணைக்கு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்பதை ஆராய ஒரு நிபுணர்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழுவை அடுத்த 4 வாரத்துக்குள்கூட்டவேண்டும். அக் கூட்டத்தில் தமிழக மற்றும் கேரள மாநில பிரதிநிதிகள் கலந்துகொள்ளவேண்டும்.
நிபுணர் குழுக் கூட்டம் நடந்தபிறகு 3 வாரத்துக்குள் என்ன மேல் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டதை என்பதை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications