தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான் - ராமதாஸ்
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று கேட்காது,ஆட்சியில் பங்கு அளிக்கப்பட்டாலும் ஏற்காது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தி.மு.க., த.மா.கா. இடையே மீண்டும் உறவை ஏற்படுத்த சட்டப்பேரவைத் தலைவர்பழனிவேல் ராஜன் முயற்சித்து வருகிறார். தி.மு.க.வுடன் த.மா.கா மீண்டும் சேர்ந்தால்மகிழ்ச்சியே. தி.மு.க. அணியில் யார் சேர்ந்தாலும் நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்.
பாண்டிச்சேரியில் தி.மு.க. ஆட்சி செய்த போது அதற்கு எங்கள் கட்சி ஆதரவுஅளித்தது. அமைச்சரவையில் பங்கு எதுவும் கேட்கவில்லை.
தி.மு.க.வுடன் முன்பு கூட்டணியில் இருந்தபோது, தமிழகத்தில் 40 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும், 20 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டது த.மா.கா.
ஆனால் இப்போது அக்கட்சி பாண்டிச்சேரியில் தி.மு.க.வின் ஆட்சியைக்கவிழ்த்திருக்கிறது. அதுபோன்ற ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் பா.ம.க.ஒருபோதும் ஈடுபடாது.
பாண்டிச்சேரி மக்கள் பா.ம.க.ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர். அதற்குதேவையான திட்டங்களை வகுத்து தேர்தலில் போட்டியிடுவோம்.
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.
நாங்கள் ஆட்சியில் பங்கு கொடுத்தாலும் ஏற்க மாட்டோம். கூட்டணி ஆட்சி தேவைஎன்று கேட்கவும் மாட்டோம். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறவேண்டும் என அவர்கள் பேசி வருவது அவர்கள் விருப்பம்.
சாதியை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள கட்சிகளின் நிலைதேர்தலுக்குப்பின் தெரிய வரும்.
தி.மு.க. அரசை நாங்கள் கடுமையாக விமரிசிப்பதாக கூறப்படுகிறது. கிராமங்களுக்குதேவையானஅடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. அரசின் நலத்திட்டங்களைநிறைவேற்றுவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. அதைத்தான் நாங்கள்சுட்டிக் காட்டுகிறோம்.
அ.தி.மு.க.வை நாங்கள் குற்றம் சாட்டுவதில்லை என்கிறார்கள். அவர்கள் தவறுசெய்யும் போது நாங்கள் தட்டிக் கேட்போம்.
வாக்காளர் அடையாள அட்டை முழுமையாக கொடுக்கப்பட்ட பின்பே அடையாளஅட்டை இல்லாமல் வாக்களிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும். அதற்கு முன் அது மாதிரி உத்தரவிட்டுள்ளது சரியானதல்ல என்றார்ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications