ஹாக்கி: அர்ஜென்டினாவை வென்று பழிதீர்த்தது இந்தியா
தனது அமெரிக்க விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் வாஜாபாய், ஐ.நா. சபையிலும், ஆசிய சங்கத்திலும் பேசிய பேச்சுக்கள் - உலக அரங்கில்இந்தியாவின் நிலையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கின்றன.
பிரதமர் பேசுவதற்கு இரு தினங்களுக்கு முன்பாக, பாகிஸ்தான் அதிபர் முஷரஃப் பேசிய போது, இந்தியாவை சமாதானத்தை புறக்கணிக்கிற நாடாகசித்தரித்ததால், அவருக்கு பதில் சொல்லும் வகையில் பிரதமர் பேச வேண்டியதாயிற்று. நிதானம் தவறாமலும், அதே சமயத்தில் மிக உறுதியாகவும்பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபருக்கு பதில் கூறினார்.
இந்த மேடையிலிருந்து பெரிய ராஜதந்திரியின் வார்த்தைகள் போல சில வார்த்தைகள் பேசப்பட்டன. ஆனால் அவை உண்மையை கேலி செய்கிற வகையில்அமைந்தன.
நல்ல எண்ணத்திற்கு அடிப்படை, செயல்கள்தானே தவிர, வார்த்தைகள் அல்ல. தீவிரவாதமும், பேச்சு வார்த்தையும் ஒன்றாகச் செல்லக் கூடியவை அல்ல ...நாட்டு எல்லையைக் கடந்தது வருகிற தீவிரவாதத்தினால், இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த தீவிரவாதம் மத அடிப்படைவாதத்துடனும், போதை மருந்து கடத்தலுடனும், கள்ளத்தனமான ஆயுத விற்பனையுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது;ஆகையால் இது ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.
தீவிரவாதம் உலக நாடுகளினால் உடனடியாக எதிர்க்கப்பட வேண்டும் ... தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை நசுக்கியவர்கள், இங்கு வந்து மனித சுதந்திரம்பற்றி பேசுகிறார்கள்; அணு ஆயுத உற்பத்திக்கான உபகரணங்களைத் திருட்டுத்தனமாக தேடிக்கொண்டவர்கள், இங்கு வந்து தெற்கு ஆசியாவிலிருந்துஇவை ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசுகிறார்கள்; ஒப்பந்தங்களை கவலை இல்லாமல் மீறியவர்கள், இங்கே வந்து யுத்தத்தை தடுக்க புதியஒப்பந்தங்கள் காண வேண்டும் என்று பேசுகிறார்கள்; 30,000 இந்தியர்களை கொன்ற தீவிரவாதத்திற்குக் காரணமானவர்கள் - வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த சமாதான நடவடிக்கையை தகர்த்தெறிந்தவர்கள் - இங்கே வந்து பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று பேசுகிறார்கள்...
பிரதமர் பேச்சினுடைய மேற்கண்ட பகுதி, பாகிஸ்தானின் வேஷத்தை உலக அரங்கில் கிழித்தெறிந்து, இந்தியா பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டைபோடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, பாகிஸ்தான் அதிபர் செய்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நியாயமாக இந்தியா பெற வேண்டிய இடத்தைப் பற்றியும் பிரதமர் பேசினார். அணு ஆயுதத் தடுப்புஒப்பந்தம் தொடர்பான இந்திய நிலையையும் வலியுறுத்தினார்,
மத அடிப்படைவாதத்தை அஸ்திவாரமாகக் கொண்டு உருவாக்கப்படுகிற, தீவிரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார். உலக அரங்கில் ஒரு பொறுப்புள்ளஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது என்கிற உண்மையை, எல்லோரும் ஒப்புக் கொள்கிற வகையில் எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானைப் பற்றிப் பேசுகிறபோது கண்டிப்பும் - பாதுகாப்புக் கவுன்சிலைப் பற்றிப் பேசும்போது உரிமைக் குரலும் - அணு ஆயுதத்
தடுப்புப் பற்றி பேசுகிற போது பொறுப்புணர்வு பற்றிப் பிரகடனமும் - இந்தியாவின் நிலை பற்றிப் பேசுகிற போது - நியாயமான பெருமிதமும்பிரதமரின் பேச்சில் கலந்திருந்தன.
இப்படி அவர் பேசியதால், உடனடியாக சாதிக்கப்படப் போவது எதுவும் இல்லை என்பது உண்மையே. ஐ.நா. சபையின் இந்தக் கூட்டம் எந்த ஒருபிரச்சனையையும் தீர்க்கவல்லதல்ல. கூட்டத்தின் நோக்கமும் அதுவல்ல.
ஆனால் உலக நாடுகளிடையே இந்தியாவின் நிலை பற்றியும், அணுகுமுறை பற்றியும் ஒரு தெளிவு ஏற்பட பிரதமரின் பேச்சு நிச்சயமாக உதவி இருக்கும்.அப்படிப்பட்ட தெளிவு ஏற்படுவதால் மட்டும், எல்லா நாடுகளும் சேர்ந்து இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துவிடப் போவதில்லை.ஆனால் நமது நிலைப்பாடுகளுக்கு அங்கீகாரம் தேட வேண்டிய நிலை நமக்கு வரும்போது, நமது முயற்சிகளுக்கு ஓர் அஸ்திவாரமாக பிரதமரின் பேச்சுஅமையும்.
பாகிஸ்தானிய பத்திரிக்கைகள், இந்தியப் பிரதமரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கிட்டி, பாகிஸ்தான் தரப்பு வாதங்கள் எடுபடாமல் போகும் நிலை -அதிபர் முஷரஃபினால் உருவாக்கப்பட்டு விட்டது என்று விமர்சனம் செய்கிற அளவுக்கு, பிரதமர் வாஜ்பாயின் பேச்சு அமைந்திருந்தது. அவருக்கு நமதுபாராட்டுக்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications