பஹ்ரைனில் அனுமதியின்றி வாழும் இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெற ஆர்வம்
துபாய்:
போலி பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் சென்று அங்கு வாழும் இந்தியர்கள் பஹ்ரைன் அரசு அறிவித்துள்ளபடி பொதுமன்னிப்பு கேட்கமிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து இந்தியாவிற்கான பஹ்ரைன் தூதர் எஸ்.எஸ்.கில் கூறியதாவது:
பஹ்ரைனில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் அதிகம். இவர்களில் 40, 000பேர் போலி பாஸ்போர்ட் அல்லது போலி விசா மூலம் இங்கு வாழ்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இவர்களக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர்களுக்கு பஹ்ரைனில் நிரந்தரக் குடியுரிமை அளிக்கவோ அல்லது சிறப்பு பயண தஸ்தாவேஜூகள்அளித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பவோ செய்யலாம் என்று பஹ்ரைன் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டப்படி அக்டோபர் 1 ம் தேதி முதல் அனுமதியில்லாமல் இங்கு வாழ்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். அவர்கள்அக்டோபர் 1 முதல் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் பொதுமன்னிப்பு பெறலாம்.
1995 ம் ஆண்டு 1,268 இந்தியர்களும், 1997 ல் 3,500 பேரும், பொதுமன்னிப்பு பெற்று தங்கள் நாடுகளுக்குத் திரும்பினார்கள்.1997 ல் 4,950 பேரும், 1998 ல் 1,218 பேரும் பொதுமன்னிப்பு பெற்று தங்கள் குடியுரிமையை நிரந்தரப்படுத்திக் கொண்டார்கள்.
இதே போல் இந்த வருடமும் பொது மன்னிப்பு வழங்க பஹ்ரைன் அரசு திட்டமிட்டுள்ளது. இதில் இந்த வருடம் 3,500 முதல் 4000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெற்று தங்கள் நாடுகளுக்குத் திரும்பவோ அல்லது அங்கேயே குடியுரிமை பெறவோமுயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமன்னிப்பு கேட்பதற்காக இதுவரை 1000 மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை இந்தியத் தூதரகத்தை அணுகியுள்ளனர் என்றார்கில்.
பஹ்ரைன் உயர் அதிகாரிகள், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி விட்டுபொதுமன்னிப்பு குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications