நரபலி: தொடங்கியது சிபிசிஐடி விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நரபலிச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை ஆரம்பமானது.

மதுரை மாவட்டம் அழகாபுரி கிராமத்தில் உள்ளது ஞானசித்தர் ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் 8 பேர் நரபலி கொடுக்கப்பட்டதாக வந்ததகவலையடுத்து ஆசிரமம் சீல் வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நரபலி சம்பவம் தொடர்பாக ஓட்டல் அதிபர் அப்பாத்துரை, பாலகிருஷ்ணன், அன்சார் அலிஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆசிரம சாமியார் நளினசேகரன் மதுரை அண்ணாநகர் போலீசில் சரணடைந்தார். பின்னர் அவரைப் போலீஸார் ரகசியஇடத்துக்குக் கொண்டு சென்றனர்.

ஆசிரமத்தில் எத்தனை நரபலிகள் கொடுக்கப்பட்டன? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார்? நரபலி கொடுக்கப்பட்ட பிணங்கள் புதைக்கப்பட்டஇடங்கள் ஆகியவை குறித்து போலீஸார் சாமியாரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் ஆசிரமத்துக்கு அடிக்கடி வரும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பற்றிய விவரங்களை அவர்கூறியதாகத் தெரிகிறது.

தற்போது நரபலிச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. சிபிசிஐடி போலீஸ் துணை சூப்ரண்டு சுந்தர்ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தயாளன்,தர்மராஜ், மகேந்திரன், ஷாஜகான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆசிரமத்தைப் பார்வையிட்டனர்.

பிணங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நாகபீடம், மூலஸ்தான பீடம், குளியல் அறைகள், படுக்கை அறைகள் ஆகியவற்றை சிபிசிஐடி போலீஸார்பார்வையிட்டனர்.

பிணங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களைத் திங்கள்கிழமை தோண்டிப்பார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+