குஜராத்தில் ஊரடங்கு நீடிப்பு - வன்முறை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு
அகமதாபாத்:
குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு அம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது வல்லெட் நகரில் தாரியாபூர் என்ற இடத்தில் இரு கோஷ்டிகளுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றி இரு கோஷ்டியினரும் வன்முறையில்ஈடுபட்டனர்.
வன்முறையாளர்களைக் கலைக்க முதலில் தடியடி நடத்திய போலீஸார் பின்னர்துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இந்த வன்முறைச் சம்பவத்தில் 6 பேர் இறந்தனர்.கெய்க்வாட் ஹவேலி என்ற இடத்தில் நடந்த வன்முறையில் ஒருவர் இறந்தார். இருஇடங்களிலும் 20 பேருக்கு மேல் காயமடைந்தனர். வன்முறையாளர்களின் கல்வீச்சில்17 போலீஸார் காயமடைந்தனர்.
இதையடுத்து தாரியாபூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தஉத்தரவு திங்கள்கிழமை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைதி திரும்பவிட்டதாகப் போலீஸார்தெரிவித்தனர்.
இதற்கிடையே, தாரியாபூர் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவம் பற்றி நீதிவிசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வன்முறையில்இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications