ஹாக்கி: இரண்டாவது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெறுமா?
சிட்னி:
ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்துவிளையாடுகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால்அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமடையும்.
குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் ஏற்கெனவே தங்களது முதல் லீக்போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்றகோல் கணக்கிலும், ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் போலந்தை 4-0 என்ற கோல்கணக்கிலும் தோற்கடித்தன.
இப் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற இரு அணிகளான ஸ்பெயின் மற்றும் கொரிய அணிகள் தங்களுக்குஇடையேயான ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டுள்ளன. ஆகவே,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்குச் செல்லும்வாய்ப்பு பிரகாசமடையும்.
1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணிதனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதில்லை. ஆனால், அந்த நிலையை சிட்னியில்அர்ஜென்டினாவைத் தோற்கடித்ததன் மூலம் இந்தியா உடைத்தெறிந்துள்ளது. இதையடுத்து புதிய தெம்பில்இந்தியா உள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கியில் ஆஸ்திரேலியாவை இந்தியா கடைசியாக வென்றது 1972-ம் ஆண்டு தான். அந்தஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.
ஆனால், அதற்குப் பிறகு நடந்த ஆட்டங்களில் இந்தியா தோல்வியுற்றது. 1976, மியூனிச் ஒலிம்பிக்கில்6-1 என்ற கோல் கணக்கிலும், 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் 4-2 என்றகோல் கணக்கிலும், 1992-ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கில் 1-0 என்ற கோல்கணக்கிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 நாடுகள் போட்டியில்ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றிக் காற்றுசெவ்வாய்க்கிழமையும் இந்தியா பக்கம் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோற்கும் பட்சத்தில் அடுத்து தென் கொரியாமற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான ஆட்டங்களில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைஇந்தியாவுக்கு ஏற்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications