கம்ப்யூட்டர் கல்வி: முன்னணியில் தமிழகம்
பிற மாநிலங்கள் ஐ.டி. குறித்து இப்போது தான் யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், பள்ளி அளவிலேயேகம்ப்யூட்டர் கல்வி என்ற அடுத்த நிலைக்கு சென்றுவிட்டது தமிழகம்.
இதற்காக இன்டெல், ஐ.பி.எம், ஆப்பிள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்பந்தங்கைளயும்மளமளவென்று செய்துமுடித்துவிட்டது. 1999-2000ம் ஆண்டில் இதுவரை 666 பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்விஅறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. 2000-2001ல் இரண்டாவது கட்டமாக மேலும் 554 பள்ளிகளில் கம்ப்யூட்டர்கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் இனி ஆண்டுதோறும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் உபயோகம் அறிந்த 50,000 மாணவர்கள்பள்ளிகளில் இருந்து வெளியே வருவார்கள். 2008ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும்அடிப்படை கம்ப்யூட்டர் கல்விக்கு வழி பிறந்துவிடும்.
இது தவிர ஆண்டுக்கு ஒரு பள்ளியில் 5 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிஅளிக்கத் திட்டமிட்டுள்ளது தமிழகம்.
மாநிலம் முழுவதும் உள்ள 60 கலைக் கல்லூரிகளும் கூட கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்த முன்வந்தன.இதையடுத்து அனைத்து கலை-அறிவியல் கல்லூரிகளிலும் ஓராண்டு கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்ததமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் தான் சிறப்பு சாப்ட்வேர் உயர் கல்வியைப் பெற முடியும் என்ற நிலையை மாற்றவும்முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு கம்ப்யூட்டர் கல்விக் கழகம் என்ற (டேனிடெக்) அமைப்பை இதற்காகஉருவாக்கியிருக்கிறது தமிழ்நாடு.
மாநிலம் முழுவதும வி-சாட் உதவியுடன் வலையமைப்பை ஏற்படுத்துவது, சாப்ட்வேர் கல்வி அளிப்பது,சாப்ட்வேர் ஆராய்ச்சி ஆகிய வேலைகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும். இதன் ஒரு பகுதியாக சாப்ட்வேர்நிறுவனங்களின் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தேவையாைனநடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும். இதுவரை 50 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 70ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து முடித்துவிட்டது டேனிடெக்.
ஆப்டிக் பைபர் இணைப்புகள்:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் ஹை-பேண்ட்விட்த் ஆப்டிக் பைபர் மூலம் இணைக்கும் திட்டமும்அமலில் உள்ளது. இந்தப் பணியில் இப்போது ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் 2 நிறுவனங்களும் இதில்ஈடுபடவுள்ளன.
இதன் உதவியால் முதல்கட்டமாக தமிழகம் முழுக்க 13,000 இண்டர்நெட் கபேக்கள் அமைக்கவும் அரசுதிட்டமிட்டுள்ளது. சென்னை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலியில் சர்வதேச டேட்டா லிங்க்வசதியை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இடையே கடலுக்கடியில் ஆப்டிக் பைபர் கேபிள் அமைக்கும் பணியைடிஷ்நெட் டிஎஸ்எல், பாரதிடெலிகாம்-சிங்டெல் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இந்த கேபிள் 10 டி.பி.பி.எஸ்.திறன் கொண்டதாக இருக்கும். இந்த பணி முடிந்துவிட்டால், தமிழகத்தில் கேட்டவுடன் கிடைக்கும்ஹைபேண்ட்விட்த் இணைப்பு. இந்த வேலை 2001ம் ஆண்டில் முடிந்துவிடும்.
இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம். 2001- 2002ல் தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 8,000 கோடியைத்தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஹார்ட்வேர் ஏற்றுமதியும் ரூ. 5,000 கோடியைத்தொடும்.
தென் இந்தியாவில் அதிகபட்ச இண்டர்நெட் இணைப்புகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கடந்தஅக்டோபர் வரை தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இண்டர்நெட் இணைப்புகளின் எண்ணிக்கை, 2.14 லட்சம்.இதில் சென்னையில் மட்டும் 1.12 லட்சம் இணைப்புகள் உள்ளன.
கர்நாடகத்தில் மொத்தம் 1.39 லட்சம் இணைப்புகள் உள்ளன. இதில் பெங்களூரில் மட்டும் 85,000 இணைப்புகள்உள்ளன. ஆந்திராவில் 64,000 இணைப்புகள் உள்ளன. இதில் 45,000 இணைப்புகள் ஹைதராபாத்தில் மட்டும்உள்ளன.
கேரளாவில் 27,000 இணைப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications