ராமதாஸ் தாக்கப்பட்டதற்கு ராமமூர்த்தி கண்டனம்
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி, டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்டசம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்.
அரசியலில் பல பிரச்சனைகள், கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அதை அரசியல் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறையைஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வாழப்பாடி ராமமூர்த்தி.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை புதுவையில் கொடியேற்று விழாவிற்காகச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின்கார் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டது. இச்சம்பவத்தில் புதுவை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மஞ்சினி உள்பட 15 பேர்காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் விடுதலை சிறுத்தைகள்தான் உள்ளனர் என்று பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
