ஜெ. தலைமையை மூ.மு.க. ஏற்காது
மதுரை:
ஜெயலலிதா தலைமையை மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஏற்காது என்று டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
பசும்பொன் மாவட்டம் கண்டதேவியில் தேவர் ரதத்தை தொடங்கி வைத்து, டாக்டர் சேதுராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது, ஜெயலலிதா தலைமையை மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஏற்காது. அண்மைக் காலங்களில் அரசியல்வாதிகளால்ஜாதிச் சண்டைகள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.
எங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை பார்த்து மனம் வெதும்பி, ஜாதி சண்டைகளுக்குமுற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த ரதத்தை தொடங்கியுள்ளோம். இந்த நாடு, நல்லவர்கள் எதுவும் செய்யமுடியாமல்இயலாதவர்களாக இருப்பதால் தான் மோசமான சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
நான் மட்டும் தனித்து நின்று ஏதும் செய்யமுடியாது. மக்கள் நம்பிக்கையை பெற பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமையைவளர்த்தாக வேண்டும். ஜாதி, அமெரிக்கா- ஜப்பான் போன்ற நாடுகளில் கிடையாது. கிராமங்களில் பொருளாதாரரீதியாகஅனைவரும் முன்னேற்றம் அடைந்தால் தான் ஜாதி ஒழியும். கலப்பு திருமணத்தால் மட்டும் ஜாதி ஒழிய முடியாது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தேவைப்பட்டால் திருமாவளவன், ஜான்பாண்டியன் ஆகியோரோடு தேர்தல் கூட்டணி வைக்கவாய்ப்புக்கள் இருக்கிறது. ஜெயலலிதா சொல்வதுபோல் தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் யாரும் ஆட்சியமைக்கமுடியாது. கூட்டணி ஆட்சிதான்.
ஜெயலலிதாவை முக்குலத்தோர் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா பசும்பொன் தேவர் திருமகனை தனதுவழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் நானே அவருடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன் என்று பத்திரிக்கையாளர்களிடம்சொன்னார் டாக்டர் சேதுராமன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications