தென்ஆப்ரிக்காவிலும் தமிழ்-ஹிந்தி சண்டை
டர்பன்:
தென்ஆப்ரிக்காவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் உள்ள தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளைப் பேசுபவர்களிடையே கருத்துவேறுபாடுஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சன்டே டைம்ஸ் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி:
தென்ஆப்பிரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சி ஜனநாயகக் கட்சி. இதில் ஹிந்தி மொழி பேசுபவர்களும், தமிழ் மொழி பேசுபவர்களும் அதிக அளவில்உள்ளனர்.
தற்போது கட்சியின் உயர்பதவிகளில் ஹிந்தி பேசும் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் பேசும் மக்கள்புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டர்பனிலுள்ள க்வாடுக்ஸாவில் ஜனநாயகக் கட்சியின் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட தமிழ்பேசும் நெல்சன் புக்காரே தனது ஆதரவாளர்களுடன்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
வெளிநடப்புச் செய்தது குறித்து அவர் கூறுகையில், ஜனநாயகக் கட்சியில் தலைமைப் பதவிகளில் ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இதை நாங்கள் எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார்.
ஆனால், இதுகுறித்து ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் எலிஸ் கூறுகையில், அண்மையில் ஜனநாயகக் கட்சியின் உள்கட்சித் தேர்தல் நடந்தது. அதில்புகாரியும் அவரது ஆதரவாளர்களும் 8 ஓட்டுக்களே பெற்றனர். அதுமட்டுமின்றி புகாரி கட்சியில் செல்வாக்கு இல்லாதவர்.
அதே நேரம் ஹிந்தி மொழி பேசும் அனுப் பாஷம் 200 ஓட்டுக்களை பெற்றார். அதனால் ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கு கட்சியில் தலைமைப்பதவிகள் கொடுக்கப்படுகின்றன. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றார்.
தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளைப் பேசுபவர்களிடையே ஒரு மெளனயுத்தமே நடந்து வருகிறது என்று சன்டே டைம்ஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications