திறமையற்ற பணியாளர்கள் வருவதைத் தடுக்க புதிய சட்டம்: யு.ஏ.இ. முடிவு
துபாய்:
இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து திறமையற்ற பணியாளர்கள் வருவதைத்தடுக்க புதிய சட்டம் இயற்ற ஐக்கிய அரபுக் குடியரசு (ஐ.அ.கு.) முடிவு செய்துள்ளது.
வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ஏராளமானவெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர். அந் நாட்டு திட்டக் கமிஷனின் ஆய்வுப்படிஅங்கு 14 லட்சம் வெளிநாட்டினர் வேலை செய்கின்றனர்.
அதாவது அந் நாட்டுப் பணியாளர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள் என்பதும் இதில் 87.1 சதவீதத்னர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 53.7 சதவீதத்தினர் இந்தியாவைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஐக்கிய அரபுக்குடியரசைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும்,மொத்த மக்கள் தொகையில் சமச்சீரற்றதன்மையும் நிலவுகிறது.
ஆகவே, வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபுக் குடியரசில் பணியாற்ற வரும்பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அதற்காக தனி சட்டம் இயற்றவும்முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந் நாட்டின தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறைஅமைச்சர் காலித் அல் கஸ்ராஜி தெரிவித்தார்.
புதிய சட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். புதிய சட்டத்தைவிரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதே நேரத்தில் திறமையற்றபணியாளர்கள் வருவதை முழுமையாக தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றார் கஸ்ராஜி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications