கலிபோர்னியாவில் இந்திய டாக்சி டிரைவர் படுகொலை
சான் ஜோஸ்:
கலிபோர்னியாவிலுள்ள, சான் ஜோஸ் கல்லூரி வாசலில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடந்தார்.
சான்ஜோஸ் கல்லூரி அமைந்துள்ள மாயேலின் அவென்யூ பகுதியில் கிடந்த அவரது பிணத்தைப் பார்த்த நபர் ஒருவர் இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் அப்பகுதிக்குச் சென்று டாக்சி டிரைவரின் பிணத்தை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸ்-பொதுமக்கள் தொடர்பு அதிகாரி தலய்சன் கூறுகையில், சுட்டுக்கொல்லப்பட்ட டிரைவரின் பெயர் தல்ஜித் சிங். வயது 29.திருமணமாகாதவர்.
அவரை யார்? எதற்காக? துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்? இந்தக் கொலையின் பின்னணி என்ன? அவரது உடம்பில் எத்தனை குண்டுகள்பாய்ந்துள்ளன? அவர் வைத்திருந்த பணமோ, அணிந்திருந்த நகைகளோ கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறதா போன்ற தகவல்கள் தெரியவில்லை.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் பிற விவரங்கள் தெரிய வரும் என்றார்.
தல்ஜித் சிங், மில்பிடாஸ் மேக்ஸி கேப் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். தல்ஜித் சிங் கொலை செய்யப்பட்டது குறித்து அவர் வேலை செய்து வந்தமேக்ஸி கேப் நிறுவன உரிமையாளர் பல்ஹர் சிங் கூறுகையில், தல்ஜித் மிகவும் நல்ல மனிதர். தோழமை உணர்வுடன் எப்போதும் சிரித்த முகத்துடன்காணப்படுவார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் 16 பேரில் இவரும் ஒருவர். அவர்ஒரு வார விடுமுறைக்குப்பின் செவ்வாய்க்கிழமை தான் வேலைக்குச் சேர்ந்தார்.
அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது என்னையும், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பிற ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து இரவுப்பணியில் வேலை செய்யவே பிற டிரைவர்கள் பயப்படுகின்றனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications