பால்வள மேம்பாட்டிற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
ஊட்டி:
மத்திய பால்வள மேம்பாட்டுக் கழகம், தமிழகத்தில் பால்வள மேம்பாட்டிற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என மாநில பால்வளத்துறை அமைச்சர் சுந்தரம்தெரிவித்தார்.
ஊட்டியில் மாநில பால்வளத் துறை அமைச்சர் சுந்தரம் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
பால் உற்பத்தியில் குஜராத், மகராஷ்டிரா ஆகியவை முன்னணியில் உள்ளன. இதற்குஅடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 95ம் ஆண்டு தமிழகத்தில் பால் உற்பத்தி 11.7 லட்சம் லிட்டராகஇருந்தது. இது தற்போது 17.5 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
மத்திய பால்வள மேம்பாட்டுக் கழகம் தமிழகத்தில் பால் பொருட்களை உற்பத்திசெய்யவும், பால்வளத் துறை மேம்பாட்டிற்காகவும், 200 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 20கோடி ரூபாய் செலவில் திருச்சியில் பாலைப் பயன்படுத்தி ஐஸ் கிரீம் தயார் செய்யும்தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது.
இரண்டரை கோடி ரூபாயில் ஊட்டியில் ஜெர்ஸி கன்றுகள் உற்பத்தி செய்ய ஒருபண்ணை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பொறுத்தவரை கோவை, நீலகிரி, மற்றும்கன்னியாகுமரி மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. மற்ற மாவட்டங்களில்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நஷ்டத்தில் இயங்கிய போதிலும் இந்தமூன்று மாவட்டங்களும் முன் மாதிரியாக லாபத்தில் செயல்பட்டு வருகின்றன.
ஊட்டியில் செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதியில் சர்வதேச அளவிலான பால் வளம்குறித்த கருத்தரங்கு நடக்கிறது என்று அமைச்சர் சுந்தரம் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications