ஆளுங்கட்சி பிரசாரத்துக்கு விடுதலைப் புலிகள் தடை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு விடுதலைப் புலிகள் தடை விதித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் நடந்து வருகிறது. தற்போது தமிழர்கள்அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய விடுதலைப்புலிகள், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு அனுமதியளித்துள்ளனர்.ஆனால் ஆளும்கட்சியான மக்கள் கூட்டணி கட்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாமல் ஆளும் கட்சியினர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அம்பாறை மாவட்டத்தில் மக்கள் கூட்டணி கட்சி வேட்பாளர் ஒருவரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர்.












Click it and Unblock the Notifications