எனது கணவரை விட்டு விடுங்கள் அண்ணா!
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள்ராஜ்குமாரை விரைவில் விடுதலை செய்யுமாறு வீர்பபனுக்கு ரேடியோ மூலமாகவேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட பின்பு அவரது மனைவியும், மகன்களும்அவரை விடுதலை செய்யக் கோரி வீரப்பனுக்கு ரேடியோ மூலம் வேண்டுகோள்விடுத்து வருகின்றனர்.
உடல் நலக் குறைவு காரணமாக பர்வதம்மாள் மல்லய்யா ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுளார். அங்கிருந்து அவர் ரேடியோ மூலம் வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், நான் உங்கள் தங்கை போல. விரைவில் என் கணவரையும், மற்றவர்களையும்விடுதவை செய்யுங்கள் என நான் பல முறை திரும்ப, திரும்ப கேட்டும் நீங்கள்கருணை காட்ட மறுக்கிறீர்கள்.
நாங்கள் எல்லோரும் துக்கத்தில் இருக்கிறோம், எனக்கு ஏற்பட்டுள்ள நிலையைஎண்ணிப் பாருங்கள் இனியாவகது என் கணவரையும், மற்றவர்களையும் எங்களிடம்அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.
ரேடியோ மூலம் அவர் தனது கணவருக்கும். தம்பி கோவிந்துக்கும் செய்தி அனுப்பிஉள்ளார். ரேடியோ மூலம் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ராஜ்குமாருக்கு ...
எனக்கு லேசாக ரத்த அழுத்தம் உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெற்றுஓய்வெடுத்து வருகிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன் என்னை பற்றி கவலைப்படவேண்டாம். 2 அல்லது 3 நாட்களில் பரிபூரண குணம் அடைந்து விடுவேன்.
உங்களோடு பேசி 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. உங்களைப் பிரிந்தும் அதிகநாட்கள் ஆகி விட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
என் உடல் நிலை குறித்து பல வதந்திகள் கிளம்பின. நீங்கள் கவலைப்படுவீர்கள்எனவே நான் ரேடியோ மூலம் இந்தத் தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
தம்பி கோவிந்துக்கு ...
நான் நலமாகவே இருக்கிறேன். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நீமாத்திரைகளை சாப்பிட்டு கவனமாக இரு என்று கூறியிருந்தார் பர்வதம்மா.
பர்வதம்மாவின் பேச்சு ரேடியோவில் திரும்ப, திரும்ப பல முறை ஒலி பரப்பப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications