ராஜ்குமார் விவகாரம்: இடம் பெயரும் கர்நாடகத் தமிழர்கள்
பெங்களூர்:
கர்நாடகத்தில் எப்பாது வேண்டுமானாலும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கும் என அஞ்சப்படுவதால்,பெருமளவிலான தமிழர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று 55 நாட்கள் ஆகிவிட்டன. இதனால், சில கன்னடஇயக்கங்கள் அமைதி இழந்து வருகின்றன. தமிழ் சேனல்கள் கட், தமிழ் பத்திரிக்கைகளுக்கு அடி, தமிழக பதிவுஎண் கொண்ட வாகனங்கள் உடைப்பு என ஆரம்பித்து கடை அடைப்பு, கல்லூரிகள் மூடல், அமைதிப் பேரணி,பந்த் என போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
கடத்தல் நடந்த முதல் வாரத்தில் பெங்களூரில் தமிழர்கள் சிலர் தாக்கப்பட்டனர். ஆனால், இது வீரப்பனைதூண்டிவிடும் எனக் கருதப்பட்டதால், இந்தத் தாக்குதல்கள் நின்றுவிட்டன. ஆனாலும் தமிழர்களை மிரட்டுவதுதொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
கன்னடர்கள் பெரும்பாலாக உள்ள பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஒருவித அச்சத்தில் தான் நாட்களை நகர்த்திவருகின்றனர்.
கடந்த 3 வாரங்களுக்க முன்பு வரை 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றசெய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தமிழர்கள் கர்நாடகத்தைவிட்டு இடம் பெயர்வது தொடர்ந்துகொண்டே தான் உள்ளது.
பெங்களூரில் கூலித் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் தான். தர்மபுரி, சேலம், ஒசூர்,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கைளச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பெங்களூரில்தினசரிக் கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தள்ளுவண்டி காய்கறி கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள் நடத்திவருகின்றனர். பெரும்பாலான கட்டடத் தொழிலாளர்களும் தமிழர்கள் தான்.
இது தவிர சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே. கர்நாடகத்தின்பொருளாதார வளர்ச்சியில் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.
இதில் அதிக சிக்கலில் இருப்பது கூலித் தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தமிழர்கள் தான். பெங்களூரில்குடிசைப் பகுதிகளில் தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ராஜாஜி நகர், மெஜஸ்டிக், சாந்திநகர், அல்சூர்உள்ளிட்ட பெங்களூரில் பெரிய குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் தமிழர்கள் தான்.
காவிரிப் பிரச்சனையைக் காரணம் காட்டி முன்பு ஒவ்வொரு முறையும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைநடந்தபோதெல்லாம் இந்தக் குடிசைப் பகுதிகள் தான் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. மைசூர், மாண்டியாமாவட்டங்களிலும் இதே நிலை தான்.
இப்போது ராஜ்குமார் கடத்தல் இந்தத் தமிழர்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதுவேண்டுமானாலும் தங்களுக்கு எதிரான வன்முறை வரலாம் என்ற பயத்துடன் தான் இவர்கள் நாட்களை நகர்த்திவருகின்றனர்.
முதலில் இந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை மூட்டை கட்டி தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருப்பதால் சில கன்னட அமைப்புகளின் மிரட்டலும் அதிகரித்துவருவதாலும் முதலில் குடும்பத்தினரை தமிழகத்துக்கு அனுப்பிய தமிழர்கள் இப்போது தாங்களும் தமிழகத்தில்தஞ்சம் அடையத் தொடங்கிவிட்டனர்.
பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கூறுகையில், எனது நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டிருந்த பல தமிழர்களைக் காணவில்லை. விசாரித்தபோது, அவர்கள் அனைவரும் பெங்களூரை விட்டுச்சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தொடர்ந்து எனது நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தமிழர்களுக்கு நான்பாதுகாப்பு கொடுப்பதாகக் கூறியுள்ளேன். ஆனால், அதையும் மீறி பலர் தொடர்ந்து வேலையைவிட்டுவிட்டுபோய்க் கொண்டு தான் உள்ளனர் என்றார்.
ராஜ்குமார் கடத்தலால் கவலையில் உள்ள கன்னட மக்களின் மன வேதனையையும், இந்த அப்பாவித் தமிழர்களின்நிலையையும் வீரப்பன் புரிந்து கொண்டு ராஜ்குமாரை உடனடியாக விடுவிப்பது தான் நல்லது.












Click it and Unblock the Notifications