தமிழக மீனவர்களை சுடாதீர்கள் ..இலங்கைக்கு இந்தியா கோரிக்கை
டெல்லி:
இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் செல்லும் இந்திய மீனவர்களை சுட்டுக்கொல்லக் கூடாது என்று இலங்கையை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நிதிஷ் குமார், இலங்கை கலை மற்றும் மதவிவகாரத்துறை அமைச்சர் லட்சுமண் ஜெயக்கொடி உள்படஇலங்கை உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இலங்கை மற்றும் இந்திய அமைச்சர்கள் மீனவர்கள் பிரச்சனை குறித்து இந்தசந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தியாவிலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் திசை மாறி இலங்கை கடற்படையினர்பிடித்து வைத்துவிடுகிறது. அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெளியே விடுவதில்லை. இதனால் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் சீல் வைக்கப்படுகிறது. இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சில நேரங்களில் சுட்டுக்கொல்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேல் நடக்கக் கூடாது. கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை தாமதிக்கக் கூடாது என்றுவேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், இந்திய கடற்படை வீரர்களால் பிடித்து வைக்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா ஒத்துக் கொண்டது குறித்து இலங்கை அரசுமகிழ்ச்சி தெரிவித்தது. இதே போல் 7 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது குறித்தும் இந்தியா மகிழ்ச்சி தெரிவித்தது.
இந்திய மற்றும் இலங்கை அரசு மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆராய கமிட்டி ஒன்று அமைக்கவும் இந்த விவாதத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications