பிரதமரைச் சந்திக்க ராஜ்குமார் மகன் முடிவு
Subscribe to Oneindia Tamil
மைசூர்:
என் அப்பாவை மீட்பது குறித்து டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர்ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவராஜ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மைசூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது அப்பாவையும், எங்கள் உறவினர்கள் 3 பேரையும் விரைவில் விடுக்கக் கோரி 28 ம் தேதி கர்நாடகத்தில் பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இதுஅரசுக்கு எதிரான பந்த் அல்ல. மத்திய அரசின் கவனத்தைக் கவர்வதற்காகத்தான் இந்த பந்த் நடத்தப்படுகிறது.
இந்தப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்டின் தீர்ப்புக்காகக் காத்திருப்பது சரியல்ல. நடிகர் ரஜினிகாந்த் எங்களுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுவருகிறார். அவர் இந்தப் பிரச்சனையில் தன்னால் ஆன முழு முயற்சியையும் செய்து வருகிறார் என்றார் சிவராஜ்குமார்.












Click it and Unblock the Notifications