ஈடு இணையற்ற தலைவர் வாஜ்பாய் .. குஷாபவ் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்:

பிரதமர் வாஜ்பாய் ஈடுஇணையில்லாத, தன்னிகரற்ற தலைவர் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் குஷாபவ் தாக்கரேஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தாக்கரே இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்ற வாஜ்பாய் அங்குள்ள நாடாளுமன்றத்தில் பேசி அனைவரையும் கவர்ந்தார்.இதன் மூலம் அவர் இந்தியாவின் ஈடு இணையற்ற தலைவர் என்று நிருபித்து விட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அவர் ஹிந்துத்துவம் என்ற பேச்சுக்கே இடமின்றி மிகவும் செம்மையாக ஆட்சி புரிகிறார். இந்தியா மிகப்பெரியஜனநாயக நாடு. அனைத்து மதங்களையும் பாகுபாடின்றி நடத்துகிறார் வாஜ்பாய்.

ஜாதி, சமயத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட தலைவர் பிரதமர் வாஜ்பாய். முஸ்லீம்களை தங்கள் கட்சியில் சேர பாரதிய ஜனதாக் கட்சி அழைப்புவிடுத்துள்ளது. அதாவது, பாரதிய ஜனதாக் கட்சியில் எந்த மதத்தினரும் பங்கேற்கலாம் என்றார் குஷாபவ் தாக்கரே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+