பந்த்தில் கலந்து கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது- நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்:
பெங்களூரில் 28 ம் தேதி நடக்கவுள்ள பந்த்தில் கலந்து கொள்ளும்படி யாரையும் வற்புறுத்தக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம்செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக்கோரி ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சபையினர் 28 ம் தேதி முழு அடைப்புக்குஅழைப்பு விடுத்துள்ளனர்.
ராஜ்குமாரை, வீரப்பன் கடந்த ஜூலை 30 ம் தேதி கடத்திச் சென்றான். அவருடன் மேலும் 3 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கஇரு மாநில அரசுகளும் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டன. ஆயினும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
இந்த நிலையில் வீரப்பன், ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். பந்த்நடத்தக் கூடாது என்று பொதுநலன் கருதி வழக்கறிஞர் வாசுதேவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் அரசுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்போது பந்த் நடத்தினால் அதுமேலும் பல பிரச்சனைகளை உருவாக்கி விடும். அதனால் பந்த் நடத்தக் கூடாது என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை முதன்மை நீதிபதி அசோக் பான், நீதிபதி குருராஜன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர்அவர்கள் கூறுகையில், பந்த் நடத்துவதால் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலையக் கூடாது. பந்த் நடத்துபவர்கள் பொதுமக்களுக்கு எந்த வித தொந்தரவும்கொடுக்கக்கூடாது. குறிப்பாக யாரையும் பந்த் தில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications