நீதிமன்றத்தை அவமதிக்கிறார் ஜெ. .. கூறுகிறார் சி.எஸ்.
சென்னை:
தி.மு.க அரசு பொய் வழக்கு போடுவதாக ஜெயலலிதா கூறுவது நீதிமன்றஅவமதிப்பாகும் என்று மகாராஷ்ட்ரா முன்னாள் கவர்னரும், மூத்த அரசியல்தலைவருமான சி.சுப்ரமணியம் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து சி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கை:
தன் மீது பொய் வழக்குகளை போடுவதே தி.மு.க. அரசின் ஒரே திட்டம் என்றுசமீபத்தில் ஜெயலலிதா கூறியிருப்பது மிகவும் விந்தையானதும், ஆதரவு அளிக்கமுடியாததாகவும் இருக்கிறது.
அவர் இவ்வாறு கூறியிருப்பது புலனாய்வு செய்யும் அமைப்புகள், நீதித்துறை மீதுகடுமையான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
புலனாய்வுசெய்த போலீசார் மிகவும் பொறுமையாகவும், கடினமாகவும் பாடுபட்டுசாட்சியங்களை திரட்டிய பிறகே ஜெயலலிதா மீது இந்த வழக்குகள் தொடரப்பட்டது.அவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் தரப்பட்டன.
தன் மீது கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் சட்டப்பூர்வமான வாய்ப்புகளைகூட அவர் பயன்படுத்திக் கொண்டார். சில வழக்குகளில் அவர் மீது தொடரப்பட்டகுற்றச்சாட்டுகளுக்காக அவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிதீர்ப்பளிக்கப்பட்டது.
மற்ற சில வழக்குகளில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தொடர அடிப்படைமுகாந்திரமான சாட்சியங்கள் இருப்பதை நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது.
ஒரு கிரிமினல் வழக்கில் இருந்து அவரை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம்வழங்கியுள்ள தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜெயலலிதா இவ்வாறுகருத்துக்கள் வெளியிட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்புதெரிவிக்காமல், அவர்களை அறியாமல் அந்த கருத்தை ஆமோதித்தது மிகவும்துரதிருஷ்டவசமானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications