ஸ்வீடனில் பரிதவிக்கும் 60 இந்தியர்கள்
ஸடாக்ஹோம்:
ஸ்வீடனில், பழத் தோட்டத்தில் வேலை செய்து வந்த 60 இந்தியர்கள்ளின் பதவி பறிக்கப்பட்டதால், அனைவரும் நிராதரவான நிலையில் தலைநகர்ஸ்டாக்ஹோமில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.
ஸ்வீடனில் பெரும்பாலும் காலை சிற்றுண்டியான ரொட்டியுடன் இணைத்து உண்ணப்படும் ஜாம் தயாரிக்க பல விதமான பழங்களை பறித்துவரும் பணியில்ஆசியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட பலர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்தியர்கள்.
இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் ஏஜென்டுகள் மூலமாக செல்கின்றனர்.
வேலை கிடைத்தவர்களுக்கு, அதற்கான காண்டிராக்டில் கையெழுத்திட்டவுடன் அவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்படும். அதில் சம்பளம் மற்றும்வேலை பற்றிய விவரங்கள் இருக்கும்.
இந்த ஆண்டு கோடை காலத்தில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு, அவர்கள் வேலை பார்த்த கம்பெனியில் மாத சம்பளமாக61,000 ரூபாயும், அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பழம் பறித்து வந்தால் கூடுதல் சம்பளமும் தரப்படும். வேலை முடிந்தவுடன்பணியாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விமான கட்டணமும் தரப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இது தலைகீழாக நடந்துள்ளது. இங்கு நாங்கள் இரண்டு மாதங்களாக வேலை பார்த்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு சம்பளம் எதுவும்கொடுக்கப்படவில்லை. நாங்கள் உயிர்வாழ்வதற்கு தொண்டு நிறுவனங்களையே நம்பி இருக்கிறோம்.
எங்களது பாஸ்போர்ட், பயணச்சீடடுகள் போன்றவற்றை எங்களுக்கு வேலை கொடுத்த கம்பெனி உரிமையாளர்கள பறித்துக் கொண்டனர். நாங்கள் எதிர்ப்புதெரிவித்தால் எங்களை வேலையை விட்டு அனுப்பி விடுவதாக மிரட்டியும் வந்தனர்.
எங்களது உழைப்பையும் மீறி அதிகமான பழங்களை பறிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் பறிப்பதற்கு பழமே இல்லையென்றால்எப்படி? என வேலை இழந்து தவித்து வரும் 60 இந்தியர்களில் ஒருவரான சிங் தெரிவிததார்.
இந்தக் கொடுமையான நிலையில் வாழ விரும்பாத 27 இந்தியர்கள் நாடு திரும்ப முடிவு செய்தனர்.அவர்களுக்கு போலீஸ் மூலம், அவர்கள் வேலை பார்த்தகம்பெனியில் இருந்து ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபாயும், திரும்பிச் செல்வதற்கான செலவுத் தொகையும் தரப்பட்டது.
இவர்களை வே லைக்கு எடுத்த வடக்கு ஸ்வீடனில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் இதுகுறித்துக் கூறுகையில், பணியாளர்கள் பொறுமையுடன்இருந்திருந்தால் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டபடி ஊதியம் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவரை அவ்வாறு கொடுக்கப்படவில்லை என்றால்அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டபடி அவர்கள் பழங்களை கொடுக்காததுதான் காரணமாக இருக்கும் என்றார்.
அரசு அதிகாரிகள் இதுகுறித்துக் கூறுகையில், இது போன்ற வருந்தத்தக்க நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும்எடுப்பதாக கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications