கோபாலை மாற்ற கர்நாடக எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

அரசுத் தூதர் கோபாலை மாற்ற வேண்டும் என கர்நாடக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ராஜ்குமாருடன் சேர்த்துக் கடத்தப்பட்ட உதவி இயக்குநர் நாகப்பா திடீரென வீரப்பன் கும்பலிடமிருந்து தப்பி வந்து விட்டார். இதனால் வீரப்பன் தரப்பினர்கோபமடைந்துள்ளனர். இந்த நிலையில், ராஜ்குமாரை மீட்பதற்காக காட்டுக்குச் சென்ற கோபால் வெறும் கையுடன் திரும்பி விட்டார்.

இந்தப் புதிய சூழ்நிலையில், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா கூட்டியுள்ளார்.

இக்கூட்டத்தில் கோபால் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிகம் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது. கடந்த முறையே கோபாலை மீண்டும்காட்டுக்கு அனுப்ப வேண்டாம். வேறு மாற்று வழிகளை பார்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள கூட்டத்திலும் கோபாலை மாற்றுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் வற்புறுத்துவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு கர்நாடக எம்.பிக்களின் கூட்டத்தையும் முதல்வர் கிருஷ்ணா கூட்டியுள்ளார். மத்திய அரசை இந்தவிவகாரத்தில் உதவச் செய்யுமாறு எம்.பிக்களிடம் முதல்வர் கோரிக்கை வைப்பார் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+